Tuesday 31 May 2016

குடிப்பிறப்பு - 2 (நாலடியார் - 142)

குடிப்பிறப்பு - 2



சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்

வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது  - வான்றோயும்

மைதவழ் வெற்ப ! படாஅ பெருஞ்செல்வம்

எய்தியக் கண்ணும் பிறர்க்கு !



சான்றாண்மை        -   மேன்மை 
சாயல்                    -   மென்மை / Dignity
தோயும்                  -   தொடும் / எட்டும் 
மை                        -   மேகம்
தவழ்                      -   உலா 
வெற்ப                    -   சிறுமலை / குன்றுளின்  அரசன் 
படாஅ                    -    காணப்படாத
எய்திய                   -   பெற்ற 


மேகம் உலவும் அளவு வானை தொடும் மலைகளின் அரசனே !
மேன்மை, மென்மை மற்றும் ஒழுக்கம் ஆகிய மூன்றும் மிகவும் உயர்ந்த 
குடியில் பிறந்தவர்க்கு அல்லாமல் -  பெரும் செல்வம் பெற்றாலும் பிறரிடன் காணப்படாது. 


Lord of the hills that reaches the sky & clouds traverse them !
Excellence, dignity & good conduct - the three qualities found in the men of race that touches heaven. The same qualities are not found in others even when they acquire great wealth, 


Monday 30 May 2016

குடிப்பிறப்பு - 1 (நாலடியார் - 141)

குடிப்பிறப்பு - 1


உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்

குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;

இடுக்கண் டலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புற் கறிக்குமோ மற்று?



உலறி                      -   தேய்ந்த / இத்துப் போன
கொடிப்புல்            -   அருகம்புல்
கறி                            -   உண்ணுதல்
இடுக்கண்               -   இக்கட்டு / துன்பம்
அரிமா                     -    சிங்கம்


பசியால் வாடி துன்புறும் போதும், சிங்கம் அருக்கம் புல்லை உண்ணுமோ ? அதைப்போல, இத்துப் போன ஆடை உடுத்தி, பசியால் உடம்பு வாடி நலிந்த போதும், உயர் குடியில் பிறந்தோர், தங்கள் கொள்கையிலிருந்து விலகுவதில்லை.



Though their clothes may be worn out & their body worn with want, men from noble birth do not leave their principles, even a bit.  Even if hunger torment them, do lions eat the creeping grass?








Friday 19 June 2015

கல்வி - 10

கல்வி - 10



அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா

துலகநூல் ஓதுவ தெல்லாங்  - கலகல

கூஉந்துணை அல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந்துணை அறிவார் இல்.




அலகுசால்                    -  அளவற்ற 
கூவும்                           -   இரைக்கும் 




அளவற்ற அறிவை பரப்பும் நூல்களை கற்காமல், உலக அறிவு தரும்  நூல்களை மட்டும்  ஓதுவது, 'கலகல" என்று வெறுமையாக கூவுவது மட்டும் அல்லாமல், வாழ்வின்  தடுமாற்றத்தை போக்கும் முறையை அறிகின்றவர் யாரும்  இல்லை.



If men ignore acquiring infinite knowledge & learn only the worldly literature, it would be like making only empty words. But cannot  acquire that wisdom by which they can remove the difficulties they may face in life.       



கல்வி - 9

கல்வி - 9



கல்லாரே ஆயினுங் கற்றோரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர்; - தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.




தலைபடுவர்                  -  முன்னேறுவர்
தொல்சிறப்பு                  -   பழமையான சிறப்பு
ஒண்ணிற                      -  ஒளிமிக்க நிறம் 
ஒழுகு                           -  கலந்து கொள்ளுதல் 
பாதிரிப்பூ                       -  பாடலம்  பூ
புத்தோடு                       -  புது மண்பானை
பயம்                             -  பலன்




கல்லாதவர்களே ஆனாலும் கற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதால் , நல்லறிவில் நாள்தோறும் முன்னேறுவார்கள் -  ஒளிமிக்க நிறமும் மணமும் கொண்ட  பாதிரிப்பூவை  சேர்வதால்  புதிய மண்பானை தண்ணீருக்கு அம்மணத்தை  தருவது போல !!




Though uneducated, if they mingle among educated people, they can improve their knowledge every day - just as when the 'padri' flower of old renown, with  bright hue & aroma, mingles with the new earthen pot, spreads the fragrance to the water in the pot !!


கல்வி - 8

கல்வி - 8



கனைகடற் றண்சேர்ப்ப ! கற்றறிந்தார் கேண்மை 

றுனியிற் கரும்பு தின்றற்றே; றுனிநீக்கித் 

தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா 

ஈரம் இலாளர் தொடர்பு.



கனை                    -    அறை / ஒலி  
கேண்மை              -    நட்பு 
நுனி                       -   குருத்து 
தூர்                        -   வேர் / root  
ஈரம்                       -   பாசம் / அன்பு 



ஒலிக்கும் கடலின் குளிர்ந்த கரை கொண்ட நாட்டின் அரசனே ! கற்று அறிந்தவர்கள் உடன் ஆன நட்பு, கரும்பின் (சாறுள்ள) நுனியை தின்பது போன்றது; நுனியை நீக்கி கரும்பின் அடிப் பகுதியை தின்பது போன்றது, பண்பும், பாசமும் இல்லாதவர்களுடன் கொண்ட தொடர்பு.



Lord of the cool shores of resounding sea !! Friendship with learned men is like eating from the tender & juicy tip of sugarcane; association with men without courtesy or feelings is like leaving the tip & eating from the hard & dry lower part of sugarcane. 


Thursday 18 June 2015

கல்வி - 7

கல்வி - 7



தவலருற் தொல்கேள்வித் தன்மை யுடையார்

இகலிலர் எஃகுடையார் நம்முட் குழீஇ

நகலின் இனிதாயிற் காண்பாம் - அகல்வானத்

தும்பர் உறைவார் பதி.




தவல்                        -  தவறல் 
அரும்                       -  அரிய
தொல் கேள்வி          -   பழமையான கேட்கப்படும் தத்துவம் 
தன்மை                    -   தத்துவம்
இகல்                        -    பொறாமை போட்டி 
எஃகு                         -   கூர்மை
உம்பர்                       -   தேவர்
உறை                        -   வசிப்பவர்
பதி                            -   பட்டினம்




தவறாத  பழமையான நூல் கேள்வியறிவு தன்மையும், பொறாமை மற்றும்  போட்டி இல்லாத கூர்மையான ஞானம் கொண்டவர்கள் குழுவில் சேர்ந்து அளவளாவி மகிழ்வதை விட இன்பம் உண்டானால் - அதை விரிந்த வானத்தில் தேவர் வசிக்கும் பட்டினத்தில் காண முயல்வோம் !




If there is any greater bliss  that is better than the pleasure in assembly of scholars with unfailing knowledge of old (verbal) literature par excellence, exempt from rivalry - let's see if we can find that in the city above the vast sky inhabited by the immortals.



Tuesday 9 June 2015

கல்வி - 6

கல்வி - 6



தோணி இயக்குவான் றொல்லை வருணத்துக்

காணிற் கடைப்பட்டான் என்றிகழார்; - காணாய் !

அவன் றுணையா ஆறு போயற்றே, நூல்கற்ற

மகன்றுணையா  நல்ல கொளல் !




வருணம்                        - குலம் ; சாதி
றொல்லை                     - தொல்லை;




தோணி இயக்குபவன் பழைய சாதியால் பின்பட்டவன் என்று இகழ மாட்டார்கள் மேலானோர். கவனியுங்கள் !! தோணி ஓட்டுபவனின் உதவியால் ஆறு கடந்ததுபோல், நல்ல நூல்களை கற்ற மகன் துணையால் மெய் அறிவு பெற்றது போல்.




Though ferryman is from the low caste, as per old traditions, no one despises him. Look ! The way one crosses the river with his help, one learns the good teachings with the help of learned son.