தூய்தன்மை - 7
ஒன்பது துளைகள் உடைய புலன்கள் வழியாய் அழுக்கு கசிந்து, நுரைத்து சேறு அலைக்கும் கசலத்தை (உடம்பை) - "பெரும் தோள்கள் உடையவள்", "பெரிய காப்புகள் அணிந்தவள்" என்று வருணிப்பர், மேல் போர்வை போர்த்திய கரும் தோல் முடவர்கள் கண்களுக்கு வெளிச்சம் போல் தெரிவதால் !!
The pot (body) which posses nine disgusting outlets, from which oozes defilement & scatters pollution and slimy liquids move around, is described by some fools as "broad shouldered beauty" & "armlets decked beauty" just because it looks bright to his eyes by a covering of black skin.
ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனுங்
கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தைப் - பேதை,
'பெருந்தோளி', 'பெய்வளாய்' என்று மீப் போர்த்த
கருந்தோலாற் கண்விளக்கப் பட்டு.
ஊறி - கசி
உவர்த்தக்க - வெறுக்கதக்க
வாய் - வழி
கோதி - நுரைத்து
கோதி - நுரைத்து
குழம் - சேறு
கும்பம் - கடம் / கலசம்
பெய்வளாய் - பெரிய காப்புகள் கொண்டவள்
பெருந்தோளி - பெரிய தோள்கள் உடையவள்
மீப் போர்வை - மேல் போர்வை