Friday, 28 November 2014

அறன் வலியுறுத்தல் - 4

அறன் வலியுறுத்தல் - 4




அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்

பெரும்பயனும் ஆற்றவே கொள்க ! - கரும்பூர்த்த

சாறுபோற் சாலவும் பின்னுதவி; மற்றதன்

கோதுபோற் போடும் உடம்பு.



அரும்                      -   அரிதாக 
கரும்                       -   கரும்பு
ஊர்                           -   sap
கரும்பு  + ஊர்ந்த    (சாறு போல்)
கோது                      -  சக்கை



அரிதாக கிடைக்கும்  உடம்பை பெற்றிருப்பது , பெரும் பயனுள்ள அறசெயல்களை செய்து முடிக்கவே என்று அறியுங்கள்.
கரும்பிலிருந்து பிழிந்த சாறு போல் பெரும் அளவு பின்னால் உதவி, சக்கை போல் வீசப்படும் உடம்பு.




Good all the best virtuous things possible, with the rarely received precious body of yours.
As the juice extracted from sugarcane, your good deeds will be your gain. After that, your body will be thrown away, like the refuse of extracted sugarcane.





அறன் வலியுறுத்தல் - 3

அறன் வலியுறுத்தல் - 3




வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

மனத்தின் அழியுமாம் பேதை; - நினைத்ததனைத்

தொலைய தென்றுணர் வாரே தடுமாற்றத்

தெல்லை இகந்தொருவு வார்.




வெய்ய                         -    fiercely
உயிரா                          -    உயிர்த்து / sighing
தொல்லையது              -     வினையால் 
ஒருவு                          -    transcend /விடு
இக                               -    விடு / நீங்கு 



பழைய செயல்களின் பயனாக, சில கஷ்டங்கள் வந்தால், பேதை மிகவும் சோர்ந்து மனதை அழித்து விடுவான். 
வந்த கஷ்டங்கள் தொலைந்து போகும் என்று எண்ணுவோர், தடுமாற்றமின்றி கஷ்டங்களிலிருந்து விடுபெருவர் !!



When the result of old deeds come to us, the fool sighs heavily & all his soul dies out.
But those who reflect & say 'this will pass' beyond life's perplexity would escape & overcome bad deeds.

Friday, 7 November 2014

அறன் வலியுறுத்தல் - 2

அறன் வலியுறுத்தல் - 2




ஆவாநாம் ஆக்க நசைஇ அறமறந்து

போவாநாம் என்னாப் புலைநெஞ்சே ! ஓலாது

நின்றுஞற்றி வாழ்தி எனினுநின் வாழ்நாள்கள்

சென்றன செய்வ துரை !!!




வாழ்தி                      -   வாழ்வாய்
என்னா                      -   என்னாமல்
நசைஇ                      -   நசைந்து ; விரும்பி
ஆக்க                         -  செல்வம்
நின்                           -   உன் 
புலை                         -  அற்ப 



ஆசைப்பட்ட செல்வத்தை பெற்று வாழ்ந்தபின், அறம் செய்யாமல் இறந்து போகலாம் என்று எண்ணாதே, அற்ப நெஞ்சமே !! 
ஓயாமல் வேலை செய்து நீண்ட நாள் வாழ்ந்த பின்  நீ என்ன செய்வாய்? சொல் !



Say not, O silly soul, we will earn desired wealth and die without doing any Charity. 
Now that you have worked hard ceaselessly, and lived a long life, what will you do when all your happy days are over?

அறன் வலியுறுத்தல் - 1

அறன் வலியுறுத்தல் - 1




அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்

புகத்தாம் பெறாஅர், புறங்கடை பற்றி

மிகத்தாம் வருந்தி இருப்பரே, மேலைத்

தவத்தாற் றவஞ்செய்யா தார்.




புக                       -  புகுதல்
அகத்தாரே           -   வீட்டினுள்ளோர்
புறங்கடை           -   வெளி கதவு / outer Gate 
அண்ணாந்து        -   மேனோக்கு 
மேலை               -   முன்னிலை 




முன் ஜென்மத்தில் தங்கள் தவறு காரணமாக தவம் செய்யாதவர்கள்,
'வீட்டினுள் உள்ளவர்களே சுகமாய் வாழ்கிறார்கள்" என்று அண்ணாந்து நோக்கிப் வீட்டினுள் அனுமதிக்கபடாதவர்களாக  வெளி கதவை பிடித்து வருந்தி நிற்பார்கள்.




Those who did no penance due to some penitence in their former lives, now look up holding the outer gate of a house, but obtain no entrance. Now they suffer more, after realising, those who live inside the houses live blessed life.







யாக்கை நிலையாமை - 10

யாக்கை நிலையாமை  - 10




கேளாதே வந்து கிளைகளா இற்றோன்றி

வாளாதே போலரான் மாந்தர்கள்   -  வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேணீங்கு புட்போல்

யாக்கை தமர்க்கொழிய நீத்து.




கிளை                                -  உறவினர்
செக்கை (சேர்க்கை?)  -  கூடு;
மரன் /மரம்                     -   விருட்சம்
சேண்                                -    நெடுந்தூரம் 
நீத்து                                  -   விட்டுசெல்லுதல் 
ஒழிய                                -   விட்டுவிடல் 
தமர்                                    -   தம் மக்கள் / உறவினர் 
புள்                                       -   பறவை 
வாளாதே                          -   சொல்லாமல் 

இற்றோன்றி                    -    இல் தோன்றி / வீட்டில் தோன்றி 



கேளாமல் வந்து, உறவினர்கள் வீட்டில் தோன்றி, சொல்லாமல் சென்றுவிடுவார்கள் மனிதர்கள். சொல்லாமல் மரத்தின் மேலுள்ள கூட்டை விட்டு நெடுந்தூரம் பறந்து போகும் பறவை போல், மனிதர்களும் உறவினர்களிடம் உடம்பை விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.




Unasked relatives come, appear in the home, and then leave silently. As the bird silently deserts the tree where its nest yet remains, and goes far off, so these leave but their body to their friends.




யாக்கை நிலையாமை - 9

யாக்கை நிலையாமை - 9




புன்னுனிமே னீர்போ னிலையாமை என்றெண்ணி,

இன்னினியே செய்க அறவினை ! - இன்னினியே

நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேள் அலறச்

சென்றான் எனப்படுத லான்.




இன்னினியே                       -  இப்பொழுது, இதே நேரத்திலே
கேள்                                        -  சுற்றம்
புன்னுனிமே னீர்போல   =  புல் நுனி மேல் நீர் போல் 




புல் நுனி மேலுள்ள  நீர்போல் நிலையாதது நம் வாழ்க்கை என்று எண்ணி, இன்றே, இதே நேரத்திலே, அறவினை செய்யுங்கள். இப்பொழுது, இதே நேரத்திலே 'நின்றான், இருந்தான், விழுந்தான், உறவினர்கள் அலறும்படி இறந்தான்' என்பது போல்  நிகழ்வதால்.




Consider that life is transient  like the dew drops on grass blades, do good deeds now, at once !! 'Even now he stood, sat, fell down & while his relatives cried aloud he died' - such is man's life.


யாக்கை நிலையாமை - 8

யாக்கை நிலையாமை - 8




யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற

யாக்கையால் ஆய பயன்கொள்க !  -  யாக்கை

மலை ஆடு மஞ்சுபோற் றோன்றி மற்றாங்கே

நிலையாது நீத்து விடும்.





மஞ்சு                           -   மேகம்
ஆய                             -  உண்டாகிய 
ஆடு                             -  ஆடுதல் 
யாப்பு                           -   கட்டு 




உயிரோடு உடம்பை கட்டாக பெற்றவர்கள், தாம் கொண்ட உடம்பின் மூலம் (மற்றவர்க்கு) பயன் தர வேண்டும் என்பதை அறிவார்களாக !
மலைமேல் செல்லும் மேகம்போல் நம் உடம்பும் தோன்றி நிலையாமல் மறைந்து விடும்.




Those who have gained life in this well-knit body should know that the body they have received is to benefit others. Like the clouds that appear & move over the mountains, our body too shall pass away soon.

யாக்கை நிலையாமை - 7

யாக்கை நிலையாமை - 7




படுமழை மொக்குளிற் பலகாலுந் தோன்றிக்

கெடும்இதோர் யாக்கைஎன் றேண்ணித்  -  தடுமாற்றஞ்

தீர்ப்பேம்யாம் என்றுணருந் திண்ணறி வாளரை

நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்?




தின்னரிவாளர்               -  மூதறிவுடையார்
பலகாலும்                        -  பலமுறை 
மொக்குள்                         -  நீர்க்குமிழி 
நேர்ப்பார்                           -  ஒப்பார் 





கனமழை நேரத்தில்  பலமுறை நீர்க்குமிழி  தோன்றி உடனே அழிந்துவிடும். இதுபோலதான் நமது உடம்பு என்று எண்ணி, தடுமாற்றத்தை விலக்கிக்கொள்ளும் மூதரிவாளரைப் போல் உணர்வோர் யார் இந்த விரிந்த உலகத்தின் மேல்?




Our body is like the  bubbles that appear very often during heavy rains and then disappear immediately. The wise men have understood this, and steadfast on wisdom, have avoided life's dubious ways. Who on this wide world can match this wisdom?

Thursday, 6 November 2014

யாக்கை நிலையாமை - 6

யாக்கை நிலையாமை - 6




நார்தொடுத் தீர்க்கில்என் நன்றாய்ந் தடக்கில்என்,

பார்த்துழிப் பெய்யில்என் , பல்லோர் பழிக்கில்என்,

தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டும்

கூத்தன் புறப்பட்டக் கால்?



நார்                     -      பாசம், கயிறு
தொடு                -      கட்டு
ஈர்க்கில்            -      இழுத்து செல்தல் 
உழி                     -      இடம் 




தோல் பையாகிய உடம்பிலிருந்துக்கொண்டு தன் வேலைகளை நன்றாக செய்த கூத்தனாகிய உயிர், உடலை பிரிந்த பின்  -  கயிர் கட்டி இழுத்தால் என்ன? நல்ல முறையில் அடக்கம் செய்தால் என்ன? கண்ட இடத்தில் போட்டால் தான் என்ன? பலரும் பழித்தால் தான் என்ன?




After the "soul" (life) leaves the 'leather bag' (body) after completing his duties, what matters if you tie the dead body and drag it away, or bury it carefully, or leave it aside in any place, or if many revile the departed ?

யாக்கை நிலையாமை - 5

யாக்கை நிலையாமை - 5




கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலரும்

பிணங்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும்  - மணங்கொண்டீண்

டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே

தொண்டொண்டொ டென்னும் பறை.




கணம்                -  கூட்டம்
கல்                    -  "கல்" என்று கதறல் 
உய்த்து              -  செலுத்து
சாற்று                -  அறிவித்தல்




பிணத்தை சுமந்து செல்லும் வழியில்  கூட்டமாய் சேர்ந்து உறவினர்கள் "கல்" என்று அலறுவதைக்  கண்டபின்னும் - கல்யாணம் செய்துக்  கொண்டு, மணவாழ்கையே இன்பமானது என்று நினைப்பவனுக்கும் ஒலிக்கும் "டொன் டொன் டொன்" என்னும் சாப்பறை (மரண அறிவிப்பு) !!




Even after seeing his relatives come together and lament, while the corpse is being carried to the funeral ground, he married & asserts that married life is a bliss. The funeral drums speaks out, and mocks his assertion.


Tuesday, 4 November 2014

யாக்கை நிலையாமை - 4

யாக்கை நிலையாமை - 4



சென்றே எறிப ஒருகால்; சிறுவரை

நின்றே ஏறிப பறைமினை; - நன்றே காண் !

முக்காலைக் கோட்டினுண் மூடிட்தீக்கொண் டெழுவார்

செத்தாரை சாவார் சுமந்து.




ஊர்வலத்தில் மேளம்  அடிப்பார்கள்.
சிருவேளை கழித்து, இரண்டாம் முறை மேளம் அடிப்பார்கள்.
நன்றாய் கவனியுங்கள் !!
மூன்றாம் முறை மேளம் அடித்ததும், சவத்தை மூடி, தீ கொண்டு எழுவார்கள் சுடுகாடு நோக்கி . 
செத்தாரை சாவோர் சுமந்து செல்வார்கள்.




They march and strike once. A little while later, they strike the drum again.
Behold properly !! They strike the drum a third time, cover the dead body, take fire, and go forth - the dying bear the dead.

யாக்கை நிலையாமை - 3

யாக்கை நிலையாமை - 3




மன்றங் கறங்க மணப்பறை ஆயின 

அன்றவற் காங்கே பிணப்பறையாப்   - பின்றை 

ஒலித்தலும் உண்டாம், என் றுய்ந்துபோம் ஆறே 

வலிக்கும்ஆம் மாண்டார் மனம்.



கறங்க             -  ஒலிக்க
மணப்பறை      -  கல்யாண மேளம்
பிணப்பறை      -  சாப்பறை / 
பின்றை           -  பிறகு  
உய்த்து            -  தப்பித்து 




கல்யாண மண்டபத்தில் ஒலித்த மேளம், அதே தினத்தில், ஆகியது மணமகனின் சவ ஊர்வலத்தின் சாப்பறை மேளம். பின்நாளில் சாப்பறை ஒலித்ததும் உண்டு. 
இதை அறிந்து, உயர்ந்த மனத்தார், இவைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி தேடிக்கொள்வர்.




The same day on which marriage drums were heard in the marriage hall, had become funeral drums. Some happened even on a later day. Knowing this happens, the men with lofty minds strive to find the way out of such incidents.

















Monday, 3 November 2014

யாக்கை நிலையாமை - 2

யாக்கை நிலையாமை - 2




வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம்

வீழ்நாட் படாஅ தெழுதலால்  - வாழ்நாள்

உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ! யாரும்

நிலவார் நிலமிசை மேல்.



வயங்கு                          -    பிரகாசமான 
அலகு                             -    எண் 
மண்டிலம்                      -    சூரியன் 
வீழ்நாள்                         -    முடிவடைந்த நாள் 
படா                               -     நிகழ் 
உலவாமுன்                   -     அழியும்முன் 
ஆற்று                            -    செய்
ஒப்புரவு                          -    அறம் ; நல்ல நடத்தை



வாழ்நாளை எண்ணிக்கையாக கொண்டு, பிரகாசமாக ஒளிக்கும் சூரியன், நாள் முடிவுபெற்றதும் மறுநாள் எழும். வாழ்நாட்கள் அழியும்முன் தகுந்த அளவு அறம் செய்யுங்கள். 
காரணம், யாரும்  நிலத்தின்மேல் நிரந்திரமாக நிலைப்பதில்லை.



The shining sun, measures your day everyday & after the day ends, rises next day without fail. Before your days pass away, do charity, as befits you; for no one abides on earth.