Friday, 31 October 2014

யாக்கை நிலையாமை - 1

யாக்கை நிலையாமை - 1




மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத்

தலைமிசைத் கொண்ட குடையர்  - நிலைமிசைத்


துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டார் அல்லால்


எஞ்சினார் இவ்வுலகத் தில்.





மதியம்              -  நிறைமதி; சந்திரன்
குடையர்             -  குடையின் கீழ் உள்ளவர்
துஞ்சு                -  மரித்தல்
தூற்று                -  அறிவித்தல் 



மலைமீது தோன்றும் நிலாபோல், யானை மீது வைத்த குடையின் கீழ் அமர்த்த இராஜாக்களும் இறந்தனர் என்று பூமியில் அறிவிக்கப்பட்டார்கள்.
இவ்வுலகத்தில் மரணத்தை வென்றவர்கள் யாரும் இல்லை.




Even King that rode on elephants, beneath an umbrella, like the moon appearing over mountains, have had their names proclaimed on earth as dead. No one in this world has escaped death.





இளமை நிலையாமை - 10

இளமை நிலையாமை - 10




ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்

தோட்கோப்புக் காலாத்தாற் கொண்டுய்ம்மின்; பீட்பிதுக்கிப்

பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்

கள்ளங் கடைப்பிடித்த னன்று.




உழல்                                  -   திரி; அலைதல் 
ஆட்பார்த்து உழல்         = ஆளைத் தேடி அலைகிறது 
அருளில்                             -  இரக்கம் இல்லாத 
தோட் கோப்பு                    -  கட்டுச் சோறு 
பீள்                                         -   கரு 
கூற்று                                  -   மரணம் / எமன்
உய்ம்மின்                         -   தப்பித்து கொள் 
கடைப்பிடி                         -   அறிந்துக் கொள்ளுங்கள் 
கள்ளம்                                -   வஞ்சனை 



இரக்கம் இல்லாமல் ஆள் பார்த்து அலைகிறது எமன் (மரணம்) என்பது உண்மை என்பதால், (தோளில்) கட்டுச் சோறு எடுத்து  காலையிலேயே தப்பித்துக் கொள்ளுங்கள்.

கருவிலிருந்து வந்த சிறு குழந்தையை, தாய் அலறக், கொண்டு செல்லும் மரணத்தின் வஞ்சனையை அறிந்துக்கொள்ளுங்கள்.




It's true that merciless Death is roaming around looking for his man.
Pack your food, & escape early morning.
Death snatches away newly born babies from wailing mothers. Its good to keep in mind Death's guile.

இளமை நிலையாமை - 9

இளமை நிலையாமை - 9




'மற்றறிவா நல்வினை, யாம் இளையம்' என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ் செய்ம்மின்;

முற்றி இருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு.




மற்று           -  பின்னே
கர                  -  மறுக்காமல் 
தீவளி           -  தீய குணம் 



"நல்வினையை பின்னே அறிவோம், நாங்கள் இளைஞர்கள்", என்று சொல்லாமல், கையில் செல்வம் உள்ளபொழுதே மறுக்காமல் அறம் செய்யுங்கள்.
பழுத்த பழங்களைத் தவிர, தீய குணத்தின் காரணமாக, காய்களும் உதிர்ந்து விழுவது உண்டு.




Do not say, "We will learn about virtue later, now we are young".
While the wealth in your hands, do not refuse to give it to the needy.
Not just the ripe fruits fall, but due to evil deeds, even the unripe fruits fall.

இளமை நிலையாமை - 8

இளமை நிலையாமை - 8




பருவம் எனைத்துள ?  பல்லின்பால் ஏனை?

இருசிகையும் உண்டீரோ? என்று - வரிசையால்

உண்னாட்டங் கொள்ளப் படுதலால், யாக்கைக்கோள்

எண்ணார் அறிவுடையார்.




பருவம்                      -   ஆண்டு; வயது
எனைத்து                  -   எத்தனை
இரு                              -   இரண்டு
சிகை                           -   உண்டிசிகை (course at a meal)
உண்ணாட்டம்         -   துல்லியமான கேள்வி
யாக்கை                      -   உடம்பு
கோள்                          -    குணம்



"உங்கள் வயது எத்தனை?", "உங்கள் பற்களின் நிலை என்ன? வலிமை உள்ளதா?", "இரண்டு வகை உணவு உண்டீரோ?" - இவ்வாறு அக்கறையுடன் கேள்விகள் சிலர் கேட்பதின் மூலம், நம் உடம்பு நிலையற்றது என்று அறிவுடையோர் அறிவர்.




"How old are you?" , "Are your teeth strong?", "Did you eat 2 courses of food", some men ask with kindness. From such inquisitive questions, the wise learns that our body is a thing of nought.



இளமை நிலையாமை - 7

இளமை நிலையாமை - 7




பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்

கனிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை; - நனி பெரிதும்

வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் ; மற்றிவளும்

கொற்கண்ணள் ஆகுங் குனிந்து.




பனி                                       -    குளிர்ச்சி
நனி                                       -    மிகவும்
வெஃகு                                 -    விரும்பு
கோற்கண்ணள்                -    கண் பார்வை குறைந்த
வேற்கண்ணள்                 =   வேல் + கண்ணுடையவள் 
பயன்மரம்                          -    பழங்கள் கொண்ட மரம் 



பனி பட்ட  பூங்காவின்  பழம்  கொண்ட மரத்திலிருந்து உதிர்ந்து விழும் கனிபோன்றது இளமை. வேல் எய்தும் கவர்ச்சிமிக்க கண்களுடையவள் என்று இவளை விரும்புவோர் அறியவேண்டியது : இவளும் ஒரு நாள் கண் பார்வை குறைந்து, கோல் ஊன்றி கூனிப்  போவாள்.




Youth is like the ripe fruit that falls from tree in the dewy grove. 
Desire not her whose eyes are as bright as darts. Soon, she too will walk bent down, with a staff in hand to aid her dim sight.



இளமை நிலையாமை - 6

இளமை நிலையாமை - 6




வெறிஅயர் வெங்களத்து வேன்மகன் பாணி 

முறிஆர் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க,


மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி 


அறிவுடை யாளர்கண் இல்.




அயர்                     -   செய் 
வெங்களம்         -    ஆடு வெட்டும் இடம் / கடை 
வேன்மகன்        -    வேல் தாங்கிய பூசாரி 
முறி                      -    தளிர் 
நறுங்கண்ணி    -    வாசமுடைய பூமாலை 
மறி                        -    ஆட்டுக்குட்டி 
மன்னா                 -    நிலையாத 



ஆட்டுக்கறி கடையில்  வேல் தாங்கிய வெறி கொண்ட பூசாரியின் பூமாலையில் காணும் தளிர்களை தின்னும் ஆட்டுக்குட்டி போல் உள்ளது இளமையின் நிலையா மகிழ்ச்சி. அறிவுடையோர் இவ்வகை மகிழ்ச்சியில் ஈடுபடுவது இல்லை.




Just how a lamb in the slaughterhouse crops the fragrant shoots from the garland in the slayer's hand, is the transient joy of the youth. However, such temporary joy is not found amid the wise men.






Wednesday, 29 October 2014

இளமை நிலையாமை - 5

இளமை நிலையாமை - 5





எனக்குத்தாய் ஆகியாள்  என்னை ஈங்கிட்டுத் 

தனக்குத்தாய் நாடியே சென்றாள் ; தனக்குத்தாய் 

ஆகி  யவளும் அதுவானாற் றாய்த்தாய்க் கொண் 

டேகும் அளித்தில் வுலகு.




ஏகும்                -  செல்லும் 
அளி                  -  எளிமை 





எனக்கு தாய் என்னை இங்கு விட்டு, தன் தாயை நாடிச் சென்றாள் .
அவளது தாயும் அதுபோலவே தன் தாய் நோக்கி  சென்றாள் . இதுவே இவ்வுலகம் செல்லும் வழி.




My mother left me here, and went to seek her mother, who also has gone in search of her mother. Thus the search goes on in this world.

இளமை நிலையாமை - 3

இளமை நிலையாமை - 3




சொற்றளர்ந்து கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்ப்

பற்கழன்று பண்டம் பழிகாறும்  -  இற்செறிந்து

காம நெறிபடரும் கண்ணினார்க் கில்லையே

ஏம நெறிபடரும் ஆறு.



சொற்றளர்ந்து           -   சொல் தளர்ந்து
பண்டம்                        -    தின்பொருள்
பழிகாறும்                   -    வெறுக்கும்
செறி                              -    நெருங்கி
ஆறு                               -    வகை




சொல் தளர்ந்து, கோல் ஊன்றி சோர்ந்து நடந்து, பற்கள் விழுந்து பண்டமும் வெறுக்கும் முதிய வயதிலும் காண்போர் வெறுக்கும் அளவு , காம இன்பத்தில் நெருங்கி வாழ்வோருக்கு விடுபெறும் வழி இல்லை.




Though their speech falters, lean on staff, walk tottering, & their teeth falls, they desire sexual pleasures till they are scorned by all. To these old men, there's no safe way out.


Monday, 27 October 2014

இளமை நிலையாமை - 4

இளமை நிலையாமை - 4




தாழாத் தளராத் தலைநடுக்காத் தண்டூன்றா

வீழா இறக்கும் இவண்மாட்டுங்  - காழில்லா

மம்மர்கொண் மாந்தர்க் கணங்கா குந் தன்கைக்கோல்

அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.




தாழா                       -      தாழ்ந்து ; கூனி
தளரா                      -       தளர்ந்து
தண்டூன்றா           -      கோல் ஊன்றி
வீழ்                           -      விழு / கெடு
காழில்லா              -      மூதறிவில்லாத
மம்மர்                      -      மயக்கம்
அணங்கா               -       துன்பம்
ஞான்று                   -      பொழுது




முதுமையில் கூனி, தளர்ந்து, தலைஆடி, கோலூன்றி வீழ்ந்து இறந்துப் போகும்  இவள் மேல்  மயங்கும் மூதரிவில்லர்கள்,  தாய் ஊன்றிய கைக்கோலை இவள் ஊன்றும் போது, துன்பத்தையே அடைவார்கள்.




Those who have desire for a woman, who may in  her old age droop, shake, hold a staff in her hand, fall & pass away, may feel nothing but anguish when she grasps in her hand the staff her mother had held once.



இளமை நிலையாமை -1

இளமை நிலையாமை -1




நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்

குழவி இடத்தே துறந்தார்;  புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி

இன்னாங் கெழுந்திருப் பார்.!!




குழவி                        -    இளமை
மன்னா                      -    unstable / நிலையாத
இன்னாங்கு              -    தொல்லை
புரை                           -     பிழை / தவறு




முதுமை வரும் என்று எண்ணி, அறிவுடையோர், இளமையிலேயே ஆசைகளை துறப்பர். நிலையாத இளமையில் தொடர்ந்து தவறுகள் செய்து மகிழ்ந்தோரே  தாங்கா வலியால் கோலுன்றி எழுந்திருப்பார்கள்.



Knowing very well that 'grey days will come', the wise would renounce the world even in young age.
But, they who enjoy unstable & faulty life in their youth, will painfully rise up leaning on staff.

இளமை நிலையாமை - 2

இளமை நிலையாமை - 2




நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்;

அற்புத தளையும் அவிழ்தன ; உட்காணாய !

வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம ? வந்ததே

ஆழ்கலத் தன்ன கலி.




நார்                     -     பந்தம் 
அஃகு                  -     குறைதல் 
அற்பு                   -    அன்பு / காதல் 
தளை                  -    பந்தம்; பாசம் 
ஆழ்கலம்          -    முங்கும் படகு /கப்பல் 
கலி                      -     குரல் / கூப்பாடு 



நன்பர்களின் பந்தம் அறுந்தன; நல்லோரும் குறைந்தனர்.
காதல் பாசமும் அவிழ்ந்தது;
உள்ளத்தை நோக்கிப்பார் !! இவ்வாழ்கையில் சம்பாதித்தவை எதும் உண்டோ?
முங்கும் கலத்திலிருந்து வரும் குரல் அல்லவா இது !!



Ties of friendship are severed; the good ones are reduced. Love's bonds are loosened too;
Look within yourself & ask, have I gained anything from this life?
The cry comes up as from a sinking vessel.











Sunday, 26 October 2014

செல்வநிலையாமை - 10

செல்வநிலையாமை - 10



உடாஅதும் உண்ணாதுந் தம்முடம்பு செற்றுங்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது

வைத்தீட்டி னர்இழப்பர்  - வான்றோய் மலைநாட !

உய்த்தீட்டுந் தேனீக் கரி.




செற்றும்                -     வருத்தியும்
கெடா                      -    அழியா
ஈட்டு                        -    சேர்த்து வைத்தல் ; hoard
உய்                          -    சேர்த்தல்
கரி                            -    சாட்சி




நல்ல உடைகள் உடாமல், நல்ல உணவு உண்ணாமல், தம் உடம்பை
வருத்தியும், நல்ல அறமும் செய்யாதோர் : கொடாமல் பதுக்கி வைப்போர் இழப்பர் .  மேகம் தொடும் மலையின் அரசனே !! சேர்த்து, பதுக்கி வைத்த தேனீயே இதற்கு சாட்சி.



Those who economise on clothes & food, and mortify their bodies, yet do not deeds of deathless virtue by hoarding them shall suffer loss - Lord of the cloud- capped hills - the bees that collects & hoards honey proves this.

செல்வநிலையாமை - 9

செல்வநிலையாமை - 9




உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ் செய்யான்,

துன்னருங் கேளிர் துயர்களையான்  - கொன்னே

வழங்கான், பொருள் காத்திருப்பான் ஏல், அ ஆ !

இழந்தான்என் றெண்ணப் படும்.




ஒளிநிறான்                -    ஒளி விட்டு காண்பிக்கமாட்டான்
காத்திருப்பான்          -    காத்து (சேர்த்து) வைப்பான்



தன் செல்வத்தை அனுபவிக்கமாட்டான், காட்ட மாட்டான், புகழ் பெரும்படி ஏதும் செய்யமாட்டான், உறவினர்களின் துயரை துடைக்கமாட்டான், வீணாய் செலவிடமாட்டான், ஆனால், சேர்த்தும் காத்தும்  வைப்பான், "ஆஹா, இவன் இழந்தான்" என்று மக்கள் கூறுவார்கள்.



He will not spend, shed no light on his wealth, performs nothing that others may praise, will not help his relatives in need, will not spend, but will hoard his wealth in vain.

"Aha ! he's lost everything", men will say about him.






செல்வநிலையாமை - 8

செல்வநிலையாமை - 8



'செல்வர் யாம்' என்றுதாஞ் செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெரும்செல்வம்  -  எல்லிற்

கருங்கொண்மூ  வாய்திறந்த மின்னும்போற் தோன்றி

மருங்கறக் கெட்டு  விடும்.




செல்வுழி             --      செல்லும் வழி;
புல்லறிவாளர்    -       குறைந்த அறியுடையவர்கள்
எல்லில்                 -       இரவில்
கொண்மூ              -       மேகம்
மருங்கற                -      ஒரு அறிகுறி இல்லாமல்


நாங்கள் செல்வம் கொன்றவர்கள் என்று கூறுபவர்கள், தாங்கள் நடக்கும் வழி தெரியாமலும் நோக்கம் இல்லாமலும் நடப்பவர்கள்.

அவர்கள் செல்வம், இரவில் கரும் மேகம் வாய்திறந்த மின்னல் போல் தோன்றி, ஒரு அறிகுறி இல்லாமல் கெட்டுவிடும்.



The low understanding men with huge wealth always boast of being rich, yet they do not understand their path or their destination.

Their wealth perishes without a trace like the flash of lightening when the black clouds opens its mouth in the night.



செல்வநிலையாமை - 7

செல்வநிலையாமை - 7




தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங் 

கூற்றம் அளந்துறுந் நாள் உண்ணும்; ஆற்ற 

அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும் 

பிறந்தும் இறவாதாரில்.



தோற்றஞ்சான்          -   அருமையாக தோற்றமளிக்கும் 
ஞாயிறு                       -   சூரியன் 
நாழி                              -   அளவில்லா 
வைகலும்                   -   நாள்தோறும் 
கூற்றம்                        -   மரணம் 
ஆற்ற                            -   மிகுதியாக 




அருமையான தோற்றமுடைய சூரியன், நாள்தோறும் நாட்களை அளந்து 
அழித்துக்கொண்டிருக்கிறது. 
அளவற்று அறம் செய்யுங்கள், அருளுடையவர்களாக .
பிறந்தபின் இறக்காதவர்கள் யாருமில்லை.



The wonderful look sun measures your days everyday & devours them. Hence, give to charity, with grace. All those who are born, have not escaped death !!!

செல்வநிலையாமை - 5

செல்வநிலையாமை - 5



என்னானும் ஒன்றுதங் கையுறப் பெற்றக்கால்

பின்னாவ தென்று பிடித்திரா  - முன்னே

கொடுத்தார் உயப்பொலர் கோடிறீக் கூற்றம்

கொடுத்தாறு செல்லுஞ் கரம்.




என்னானும்               -    எதுவானாலும்
உய                               -    escape /
ஆறுசெல்                   -    பாலைவன வழி
கூற்றம்                       -     மரணம்
கோடு இல் தீ             -    அளவு இல்லா கொடிய


கொடிறீ                        =    கோடு  இல் தீ


ஏதாவது ஒன்று தன் கையில் கிடைத்தால், பின்நாளில்
உபயோகம் ஆகும் என்று பிடித்திருக்க வேண்டாம்.
காரணம்,
முன்பே கொடுத்தவர்கள் கொடிய மற்றும் தீய மரணம்
நம்மை பாலைவனம் வழியாக இழுத்து செல்வதிலிருந்து தப்பலாம் !!




If you gain or receive something in your hand, do not hold it with you thinking it will be of use some other day. Because, those you give to charity in time, would escape the cruel & inflexible death that drags the captives along the desert !!!




செல்வ நிலையாமை - 4

செல்வநிலையாமை  - 4




நின்றன நின்றன நில்லா எனஉணர்ந் 

தோன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க;

சென்றன சென்றன வாழ்நாள், செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று !!!



ஒன்றின               -  முக்கியமான/ பொருந்திய செயல்கள்
செறுத்துடன்      -   பலத்துடன்
கூற்றம்                -    மரணம்
செறுத்து              -    கோபம்




நிலைக்கும் என்று நாம் நினைத்தது ஒன்றும் நிலைக்கவில்லை.
ஆதலால், பொருந்திய செயல்களை முழு பலத்துடன் செய்க.
காரணம்,
கழிந்த நாட்கள் கழிந்தன. கோபத்தோடு வந்தது மரணம் !!



All that we thought would be permanent did not stay. Hence, do all the suitable deeds without delay.
Your days spent, have passed forever, and the angry death is come !!



செல்வநிலையாமை - 3

செல்வநிலையாமை -3




யானை எருத்தம் பொலியத் குடைநிழற்கீழ்ச்

சேனைத் தலைவராய்ச் சென்றோரும்  -  ஏனை


வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட


மனையாளை மாற்றார் கொள !





உலப்ப      -   கெடுக்க
எருத்தம்   -  பிடரி ; பிடர் ; மிடறு



ஆண் யானை மீது அமர்ந்து, குடை நிலழ் கீழ்,
சேனை தலைவராய் சென்றோரும், மற்ற வினையால்
கெட்டு, வீழ்வர் - தான் கொண்ட மனைவியையும் மற்றவர் கொள்ளும்
அளவுக்கு !!



Those who rode on male elephants, beneath umbrella, & lead their army, when other deeds destroy, shall fall so badly that, their own wives would be taken as captives by their enemies.

செல்வநிலையாமை - 2

செல்வம்நிலையாமை - 2




துகடீர் பெரும்செல்வற்  தொன்றியக்காற் றொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க.


அகடுற யார்மாட்டு நில்லாது செல்வம்


சகடக்கால் போல வரும்.





துகள்                         -   குற்றம்
பகடு                          -   காளை
பகடு நடந்தகூழ்         -   Grain trodden by bullocks
அகடு                         -   உள்ளம் / within
அகடுற                      -  நடு நிலைமையாக 



 குற்றமில்லா  முறையால்  பெரும் செல்வம்  பெற்றால், காளை  கொண்டு  வைக்கப்போரிட்ட நெல்லை / கூழை பல்லாரோடு பகிர்ந்து உண்ணுங்கள்.
செல்வம் யாரோடும் நில்லாமல், சகடவண்டியின்  சக்கரம் போல் சுற்றி வரும்.



If you earn ample amount of wealth by blameless means, you share the grains - which are trodden by bulls -  with many people. 
Prosperity stays not with one man, but keeps rotating like a wagon's wheel.


செல்வநிலையாமை - 1

செல்வநிலையாமை - 1




அறுசுவை உண்டி அமர்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கிஉண் டாரும்  - வரிஞ்சராய்


சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ் எனிற் செல்வம் ஒன்

றுண்டாக  வைக்கற்பார் றன்று !!!





அறுசுவை = 6 flavours. ; கைப்பு (கசப்பு), இனிப்பு, உவர்ப்பு (Salty),                                                       புளிப்பு (sourness ),துவர்ப்பு, கார்ப்பு (Pungent )

அமர்தில்லாள்              -   அமர்ந்து + இல்லாள் (மனைவி)




மனைவி அமர்ந்து ஊட்ட, அறுசுவை உணவு உண்டவரும்,வரிஞ்சராய் சென்று ஒரு வேளை கூழுக்காக  பிச்சை எடுப்பர்.
அதனால், செல்வத்தை பெரிதாக எண்ண வேண்டாம்.




Those who ate 6 flavors of food at home, fed by their house-wife, now roam as paupers, begging for porridge. Hence, do not consider wealth as anything significant.



செல்வநிலையாமை - 6

செல்வநிலையாமை - 6



இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீ இக்

கூற்றம் குதித்துய்ந்தார் ஈவில்லை ; ஆற்றப்

பொரும் பொருள் வைத்தீர் ! வழங்குமின் ! நாளைத்

தழீ இற்தழீ இந்  தண்ணம் படும்.



இழை             -    destined / விதிக்கப்பட்ட
எல்லை         -     boundary
தழீ இம்          -    கொட்டுவின் ஒலி
தண்ணம்       -     இழவு ஊர்வத்தில் அடிக்கும் "டன் -டன்"  கொட்டு; சாப்பறை;
வைத்தீர்!       -    சேர்த்து வைத்தவர்கள்
ஆற்ற              -    பெரும் / அதிகமான
வழங்குமின்! -    கொடுங்கள்
இகவா              -   கடக்க இயலாது



விதிக்கப்பட்ட நாட்களின் எல்லையை கடக்க இயலாது.
பிழைத்து ஓடி மரணத்தை வென்றோர் இங்கு யாருமில்லை.
பெரும் செல்வம் வைத்தவர்களே ! கொடுங்கள் !
நாளை சாப்பறை சத்தம் ஒலிக்கும் (மரண ஊர்வலத்திற்காக) !



Man's days pass not his destined limit. No one has ever escaped death's power, made off & got free.
O hoarder of excess wealth, give it to charity. Tomorrow the funeral drum will sound.