Saturday, 27 December 2014

தூய்தன்மை - 6

தூய்தன்மை - 6




குடருங் கொழுவுங் குருதியும் என்பும்

தொடரு நரம்பொடு தோலும்  - இடையிடையே

வைத்த தடியும் வழும்பும்ஆம் ; மற்றிவற்றுள்

எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள் ?




குடருங்            -  குடலும்
கொழு              -  மூளை
குருதி               -   இரத்தம்
தொடரும்         -   இணைக்கும்
என்பும்             -   எலும்பு
தடி                   -   சதை
வழும்பு            -   கொழுப்பு
எத்திறம்           -    எந்த வகை
ஈரம்                 -    ஈரமான
கோதை            -    பூமாலை




குடல், மூளை, இரத்தம், இலும்பு  இவைகளை இணைக்கும் நரம்புகளும் தோலும்; இடையிடையே வைத்த சதையும் கொழுப்பும் கொண்டதல்லவா  உடம்பு? இதில் எந்த வகையானவள் ஈரப் பூச்சூட்டிக்கொள்பவள் ?




Our body contains intestines, brains, blood, bones & nerves that connect these & skin - and here and there fat & flesh interposed. In such a body, what sort of being is she who insist on adorning herself with fresh garlands?



தூய்தன்மை - 5

தூய்தன்மை - 5




முல்லை முகைமுறுவன் முத்தென் றிவைபிதற்றுங்

கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவனோ?

எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க

பல்லென்பு கண்டொழுகு வேன் .




முல்லை                -   jasmine 
முகை                    -  அரும்பு 
முறுவன்                 -   முறுவல் / பல் 
கல்லா                    -    படிப்பறிவு இல்லாதோர் 
புன்மாக்கள்             -    இழி மக்கள் / mean people 
கவற்ற                    -    கவலைபடுத்த 
புறங்காட்டு             -    சுடுகாட்டு 
உதிர்                       -    பிரிந்து  
உக்க                       -    விழுதல்
பல்லென்பு              -    பல் + என்பு (எலும்பு)
ஒழுகுவேன்            -    ஒழுக்கத்துடன் நடப்பேன் 



"அவளது பற்கள் முல்லை அரும்பு போன்றது!" , "அவளது பற்கள் முத்துக்கள் !" - என்று பிதற்றும் படிப்பறிவு இல்லாத கீழ் மக்கள் என்னை திசை திருப்ப விடுவேனோ?
எல்லோரும் காணும்படி  சுடுகாட்டில் விழுந்த பற்கள் மற்றும் எலும்புக்களை கண்டவன் ஆதலால், நான் ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்வேன் ! 




Though uneducated worthless men rave about her teeth as " jasmine buds" or "pearls", shall I allow them to distract me?
As one among many who see in the cremation grounds the fallen teeth & bones strewn around, I will behave myself.







Friday, 26 December 2014

தூய்தன்மை - 4

தூய்தன்மை - 4




தெண்ணீர்க் குவளை பெரு கயல் வேல்'  என்று

கண்ணில் புன்மாக்கள் கவற்ற விடுவனோ,

உண்ணீர் களைந்தக்கா னுங்குசூன் றிட்டன்ன

கண்ணீர்மை கண்டொழுகு வேன்.





சூல்                                 -   தோண்டி எடு; சூப்பு
புன் மாக்                          -   இழி மக்கள்
ஒழுகுவேன்                    -    செல்வேன்
தெண்ணீர்                       -    தெள் நீர் ; தெளிவான நீர்
கயல்                              -    கெண்டை மீன்
குவளை                         -    குவலயம் ; நீர் தாமரை



"தெளிந்த நீரின் தாமரை அவளது கண்கள்!",  "கெண்டை மீன் போல் கண்கள் உடையவள்!",  "வேல் போன்ற கண்கள் அவளது!" என்று கீழ் மக்கள் கூறுவதை கேட்டு, என் கண்களால் கவருவேனோ ??
நீரை எடுத்து நுங்கை தோண்டி எடுத்து வீசியதைக் கண்டவனைப் போல் நான் என் வழி தவறாமல் செல்லுவேன்.





Shall I become blind to my purpose by the mean people who try to distract me saying, "That woman's eye is like water-lily in clear stream!", "Her eyes are beautiful like fish!", "Her eyes are sharp as javelin!" ?
Having seen that eye's real nature is like the "Nungu" of palm tree scooped out, after the water is drained out, I will go my way without being distracted.


தூய்தன்மை -3

தூய்தன்மை -3




தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூட்டிப்

பொய்க்கொலஞ் செய்ய ஒழியுமே - எக்காலும்

உண்டி வினையுள் உறைக்கும் எனப் பெரியோர்

கண்டுகை விட்ட மயல் .



கோலம்        -    அலங்காரம் 
மயல்           -    சரீரம்;
உண்டி          -    உணவு
வினையுள்   -   வினையால்
உறைக்கும்   -   நாற்றமடிக்கும் 



வாயில் வெற்றிலை பாக்கு மென்று, தலைநிறையப் பூச்சூட்டி மற்றும் பொய் அலங்காரத்தால் - எப்பொழுதும் உண்பதால் உடம்பிலிருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்க முடியாது. இதை அறிந்த பெரியோர் உடம்பை கைவிட்டனர்.




By chewing paan, wearing flower on head & adorning body with expensive clothes you cannot stop the foul smell reeking out of the body from excessive consumption of food. Knowing this, the learned men abandoned the body.




தூய்தன்மை - 2

தூய்தன்மை - 2




தோற் போர்வை மேலுந் தொளை பலவாய்ப் பொய்மறைக்கும்

மீப்போர்வை மாட்சித் துடம்பானால்  - மீப்போர்வை

பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்

பைம்மறியாப் பார்க்கப் படும்.




தொளை                             -   துவாரம் 
புகலாது                              -   பேசாமல் 
மீப்போர்வை                      -   மேல் போர்வை 
பைம்மறி                            -    பைக்குள்; மறி = குட்டி (கரு)




தோல் என்னும் போர்வையால் மறைத்த உடம்பில், பல துவாரங்கள் கொண்ட  அழுக்கை  மறைக்கிறது  நம் உடம்பு. மேல் போர்வையால் உள்ளிருக்கும் அழுக்கானவைகளை மறைக்காமலும், காம வார்தைகள் புகலாமலும் நம் உடம்பை ஒரு வளர்ச்சி பெறாத கருவைப் போல் பார்க்கவேண்டும்.




Though our body is covered with skin, it covers many apertures inside the ugly body. Since, the beauty is owed only to the outward skin that cover the false body, no words of lustful desire should enter our body. Our body should be seen as an under developed embryo.














Friday, 19 December 2014

தூய்தன்மை - 1

தூய்தன்மை - 1




மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர்

நொக்கார்கொ னொய்யதோர் புக்கிலை?  - யாக்கைக்கோர்

ஈச்சிறகன்னதோர் தோல் அறினும், வேண்டுமே

காக்கை கடிவதோர் கோல் .



மா                             -  மாம்பழம்
கேழ்                          -  நிறம்
மடம்                         -  மடமை
புக்கில்                      -  வீடு
நொய்யது                 -  transcendent
கோல்                       -  தண்டு
காக்கை                    -  காகம்
கடி                            -  scare  away
அறினும்                  -  அறுத்தல்


"ஓ ! மாநிற மடந்தையே, நல்ல அழகியே" என்று போற்றும் பெரியவர்கள், காண்பதில்லையோ அப்பெண்ணின் தாழ்ந்த உடம்பின் இயல்பை?
அவ்வுடம்பில், ஓர் ஈயின் சிறகைப் போன்ற சிறு அளவு  தோல் அறுபட்டாலும், காக்கையை துரத்தும்  கோல் வேண்டுமே !!



Those men who rave about a maiden saying "O ! fair & good looking woman!", do they not know how dirty & low body life is housed in ? 
If the skin be cut as slight as a house-fly's wing, you may need a stick that drives away the crows.


அறன் வலியுறுத்தல் - 10

அறன் வலியுறுத்தல் - 10




மான அருங்கல நீக்கி இரவென்னும்

ஈன இளிவினால் வாழ்வேன்மன்; - ஈனத்தால்

ஊட்டியக் கண்ணும் உறுதி  சேர்ந் திவ்வுடம்பு

நீட்டித்து நிற்கும் எனின் !!



மான                          -  மானம் 
அரும்                         -  அரிய 
கல                               -  அணிகலம் / ஆபாரணம் 
இரவு                          -  யாசகம்
ஈனம்                         -   = இன்மை ; கனவீனம்/ dishonour 
இளி                            -  இழிவு







மானம் என்னும் அரிய அணிகலனை நீக்கி, யாசகம் என்னும் கனவீன இழிவினால் வாழ்வேன் - கனவீனத்தால் உண்டு உறுதியோடு இவ்வுடம்பு நீடித்து வாழும் என்றால் !!





Parting with honor's rare jewel, I might still consent to live a supplicant's life of shame, if when I eat with such disgrace, this body could maintain its strength and last for very long days !!









அறன் வலியுறுத்தல் - 9

அறன் வலியுறுத்தல் - 9




வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்;

வைகலும் வைகலை வைகும், என் ரின்புறுவர்;

வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்.




வைகல்                        -  நாள்தோறும்
வைகுதல்                    -  நின்றுவிடல்
வைகும்                        -  நிறுத்தும் 




நாள்தோறும் நாட்கள் வரக்கண்டும், நாள்தோறும் நாட்கள் முடிகின்றன என்று  உணராமல் இன்புறுவர், நாள்தோறும் காலையில் நம்  வாழ்நாட்கள் குறைகிறது என்று உணராதவர்கள்.




Daily those who see the passing day, enjoy the days as if  days are not reduced. 
Daily with every dawn, they do not realise that days are cut from their days allotted.

அறன் வலியுறுத்தல் - 8

அறன் வலியுறுத்தல் - 8




உறக்குஞ் துணையதோர் ஆலம்வித் தீண்டி

இறப்ப நிழற்பயந் தாஅங்  - கறப்பயனுந்

தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்

வான்சிறிதாப் போர்த்து விடும்.




உறக்கு                      - கிள்ளு 
ஈண்டு                        - வளர் /கூட்டு/ பெருக்கு
இறப்ப                        -  அதிகமாக
தக்கார்                       -  பொருந்திய
அறப்பயன்               -   அறமின் பயன்





(விரலால்) கிள்ளி எடுக்கும் அளவு  ஆலம் வித்து மிக சிறிதாக இருந்தாலும், பெரிய மரமாய்  வளர்ந்து நிழல் தருவது போல், உதவியின்  அளவு சிறிதாக இருந்தாலும், பெற தகுந்தவர் கையில் சேர்ந்ததால், அது வானை விட பெரியதாகி விடும்.





The banyan seed, though it be a very small in size, it grows to be a mighty tree that gives ample shade.
Similarly, a gift, though small,if received by a deserving hand, will make skies look smaller.

Saturday, 13 December 2014

அறன் வலியுறுத்தல் - 7

அறன் வலியுறுத்தல் - 7




மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால்

எத்துணையும் ஆற்றப் பல ஆனால்  - தொக்க

உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்

கிடந்துன்ணாப் பண்ணப் படும்.



தொக்க                   - compacted ; ஒன்று சேர்ந்து
ஆய                          - உண்டாகிய
உம்பர்                      - மேலுலகம்
ஒப்புரவு                   - நல்லொழுக்கம்






உடல் வாழ்க்கையால் செய்யத்தக்க அறச்செயல்கள் பல உண்டு என்பதை  ஆராய்ந்துப் பார்த்தாலும், நம் உடம்பின் இன்ப நலத்திற்க்காக  மட்டுமே செயல் படாமல், வருங்கால மக்கள் பயன் அடையுமாறு செயல்பட வேண்டும்.



Even though you understand that there's a lot to gain in this bodily (worldly) life, you should not work only for your comforts, but do deeds by which the world in future would enjoy the fruits of your deeds. 






Friday, 12 December 2014

அறன் வலியுறுத்தல் - 6

அறன் வலியுறுத்தல் - 6




இன்றுகொல், அன்றுகொல், என்றுகொல், என்னாது

பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி,

ஒருவுமின் றீயவை, ஒல்லும் வகையான்

மருவுமின் மாண்டார் அறம் .




ஒருவு                     - shun ; விடு
ஒல்லும்வகை    - எல்லா வழியிலும்
மருவு                      - embrace ; சேர்




"மரணம் இன்றா? அன்றா? என்று?" என சொல்லாமல், நமக்கு பின்னாலேயே மரணம் நிற்கிறது என்று எண்ணி, தீமையை விலக்கி, முடிந்தவரை ஏற்று கொள்ளுங்கள் சான்றோர்கள் சொல்லும்  நல்லறத்தை.




Do not ask questions like "Is death today? that day? or which day?". Understand that Death is always standing behind you, and shun all evil things. Embrace virtuous life that Sages teach.

அறன் வலியுறுத்தல் - 5

அறன் வலியுறுத்தல் - 5




கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும் பொழுந்து வேங்காற் றுயர் ஆண் டுழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்காற் பரிவ திலர்.



ஆட்டு                      -  அரைத்து / Grind in a mill
சிறுகாலை               -   அதிகாலை
துரும்பு                    -   சக்கை
வேம்                       -   வேகும்
ஆண்டு                    -   அங்கு
உழவார்                   -    will  not suffer 
பரிவு                       -   இரங்கு 



((அதிகாலையில்)) இழம் கரும்பை பிழிந்து சாறை  எடுத்தபின், சக்கையை வேகவைத்தால் வலி அறியாது. அதுபோல், வருந்தி உடம்பின் முழு பயனையும் பெற்றபின், மரணம் வரும்பொழுது  வருத்தப் படுவதில்லை.




After extracting juice from sugarcane early, when the refuse is thrown into fire, it will not suffer pain.
Similarly, after extracting the fruits of our existence from our embodied existence, will not feel pangs when death shall come.