மெய்ம்மை - 3
காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர்; ஏலா
இடரொருவர் உற்றக்கால், - ஈர்ங்குன்ற நாட !
தொடர்புடையேம் என்பார் சிலர் !
காலாடு - சுறுசுறுப்பாக
கிளைஞர் - உறவினர்
மேலாடு - மேலே சுற்றும்
மீன் - நட்சத்திரங்கள்
ஈரம் - ஈரமான மாலை
குன்ற - குன்று
ஈரமான மலைகள் கொண்ட நாட்டின் அரசனே !
செல்வத்தோடு சுறுசுறுப்பாக இருந்த போது உறவினர்கள் வானத்தின் மேல் சுற்றும் விண்மீன்கள் போல் பலபேர் இருப்பர். வறுமையோடு உடம்பிற்கு இயலாமல் போனால், சிலரே 'உறவினர்' என்று உரிமை கொள்வார்கள்.
Lord of the dripping hills !! When a man is active with wealth, relatives are countless as shining stars that move in the sky. When poverty and bad health befalls, very few claim close alliance with him.