Thursday, 28 May 2015

ஈகை - 2

ஈகை - 2



முன்னரே சாநாண் முனிதக்க மூயுள ;

பின்னரும் பீடழிக்கு நோய் உள ; கொன்னே

பரவன்மின் ! பற்றன்மின் ! பாத்துண்மின் ! யாதுங்

கரவன்மின் ! கைத்துண்டாம் போழ்து !




சாநாள்                    -   மரண நாள்
மூ                           -   மூப்பு
முனி                       -   வெறுப்பு
கொன்னே                -  வீணாக
பர                           -  புகழ்
பற்றன்                    -   அபகரித்தல் / பெறுதல்
பாத்து                     -    பகுத்து
கர                          -    ஒளி / மறைத்தல்
கைத்து                   -   கைப்பொருள் / சொத்து 




உங்கள்   முன் மரண  நாளும், வெறுக்கதக்க மூப்பும் உள்ளது.
பின்னே, பெருமையை அழிக்கும் நோயும் உள்ளது.
வீணாக, பொருளை பெருக்காதீர்கள் ! பொருளை பற்றிக் கொள்ளாதிருங்கள் ! பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள் ! கையில் கொண்ட பொழுது  பொருள் எதையும் ஒளிக்காதீர்கள் !




Before you are death's day and detestable senility; behind is diseases that humble pride.
Hence, do not waster your days in increasing your wealth, clinging on to your wealth. Eat, after sharing food; while wealth is in your hands, do not hide any of them !!

No comments:

Post a Comment