பிறர்மனை நயவாமை - 10
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருட் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.
உருகெழு - வெப்பம் மிகுந்த
செந்தீ - சிவந்த தீ
ஒளி - மறை
ஊருக்குள் எழுந்த வெப்பம் மிகுந்த சிவந்த நெருப்பிலிருந்து
தண்ணீரில் குளித்து தப்பித்துக் கொள்ளலாம். தண்ணீரில் குளித்தாலும்
காமம் சுடும், குன்று மேல் ஏறி ஒளித்துக் கொண்டாலும் காமம் சுடும்.
From the fire that fiercely rises in the village, you can escape by bathing in water. Though you bathe in water, lust will burn; and even if you climb the hill to hide yourself there, still lust will burn.

No comments:
Post a Comment