Thursday, 28 May 2015

பிறர்மனை நயவாமை - 5

பிறர்மனை நயவாமை - 5




செம்மைஒன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்

கொம்மை வரிமுலையா டோண்மரீஇ -  உம்மை

வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே இம்மை

அலியாகி ஆடிஉண் பார்.




செம்மை           -  நேர்மை 
வரி                   -  புள்ளி
கொம்மை         -  உருண்டை 
முலை              -   மார்பகம்
மரீஇ                -  மருவி; defile
உம்மை            -  மறுமை;
மனை               - மனைவி




நேர்மை என்பது இல்லாமல், சிற்றினம் சேர்ந்து, அழகிய பெருகிய மார்பகங்களை கொண்டவளுடன் சேர்ந்து, முற்பிறவியில், வன்முறையால் பிறன் வீட்டிற்கு சென்றவர்களே , இப்பிறவியில் நீ அலி ஆகி கூத்தாடி உண்டு வாழ்வார்கள்.




In the former birth, without any regard to righteousness, if you mingled with mean men, and enjoyed intercourse with beautiful women with round breasts, and violently approached other's men's wife - in this birth you will become eunuch and you shall earn your bread by dancing.

No comments:

Post a Comment