Friday, 15 May 2015

துறவு - 5

துறவு - 5




கொன்னே கழிந்தன் றிளையாமையும் , இன்னே

பிணியோடு மூப்பும் வரும்ஆல் ,  - துணிவொன்றி

என்னொடு சூழா தெழுநெஞ்சே !  போதியோ

நன்னெறி சேர நமக்கு?




கொன்னே                - வெறுமையாக
இன்னே                   -  இப்பொழுதே
பிணி                       -  நோய் 
போதியோ               -  போவாயோ
சூழாது                     -  விவாதிக்காமல் 
நன்னெறி                 -  நல் ஒழுக்கம் 



வெறுமையாக கழிந்தது இளமை. விரைவில் நோயுடன் வரும் முதுமையும்.
என்னோடு வாதிடாமல் எழு துணிவோடு, நெஞ்சே !! போவாயோ, நம் இருவருக்கும் (ஆத்மா + மனது)  நல் ஒழுக்கம் வந்து சேர ?




Youth is spent in vain. Soon diseases and old age will come.
O soul, without arguing with me, boldly rise ! Wont you come with me to gain virtue for both of us?

No comments:

Post a Comment