சினமின்மை - 7
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார்; - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்காற் றாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.
மாற்றார் - பகைஞர்
மாற்று ஏற்பார் - பகை ஏற்படுத்தியவர்
ஆற்றாமை - பலவீனம்
நேர்த்தி - எதிர்த்து
பேர்த்து - திருப்பி
பகைஞராய் நின்று பகைப்போருக்கு எதிராக செயல்பட ஏலாமையை
பலவீனம் என்று சொல்ல மாட்டார்கள் அறிஞர்கள்.
பலவீனத்தையும் எதிர்த்து தீய செயல்களை பகைஞர் செய்தாலும், அவருக்கு திருப்பி கடும் செயல்கள் செய்யாதிருப்பதே நல்லது.
When enemies stand forth and begin conflict, to decline the fight is not lack of power, as per wise men.
Even when enemies have confronted and does intolerable evils, it is good not to harm them in return.

No comments:
Post a Comment