பழவினை - 5
நினைத்துணையர் ஆகித்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்த தெவனுண்டா மேலை
வினைப்பய னல்லாற் பிற?
தினை - millet
தேசு - ஒளி /மகிமை
உள் அடக்கி - உள்ளே மறைத்து
பனைத்துணையார் - பனை மரம் அளவு
வைகலும் - நிதமும்
பாடு - கௌரவம்
மேலை - முந்தைய
தினை அளவு சிறுத்து, கண்ணியத்தை உள் அடக்கி நிதமும் கௌரவம் அழிந்து வாழ்வார்கள், ஒரு காலத்தில் பனைமரம் அளவு பெருமையுடன் வாழ்ந்தவர்கள். இவ்வாறு வாழ்வது முன்கால தீவினையின் பயனே அன்றி வேறு எதுவும் உண்டோ?
Those who lived with dignity as great as palymra trees, buried their luster within them, and lived a life as small as millet seed. If this is not the fruits of deeds of his former days, what other cause can that be?

No comments:
Post a Comment