Thursday, 28 May 2015

பிறர்மனை நயவாமை - 9

பிறர்மனை நயவாமை - 9




அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்

வெம்பிச் சுடினும் புரஞ்சுடும்;  - வெம்பிக்

கவற்றி மனத்தைச் சுடுதலாற் காமம்

அவற்றினும் அஞ்சப் படும்.




அழல்               -      நெருப்பு
அவிர்கதிர்        -      சுடர்  கதிர்கள்
கவற்றி             -     கவலைப் படுத்தி
வெம்பி             -     கொதித்து 




அம்பும், நெருப்பும், சூரியனின் சுடரொளி கதிர்களும் கொதித்து சுட்டாலும் உடம்பின் மேல் மட்டுமே சுடும். ஆனால், நெஞ்சினுள் கொதித்து, கவலைப்படுத்தி, மனதை சுடுவதால் காமம் அவற்றைக் காட்டிலும் அதிகமாக அஞ்சப் படும்.





Arrow, fire and sun's glittering rays may rage and burn, but these burn the man's outer body alone. Lust rages and distracts and burns the mind, and is more to be feared than they.


No comments:

Post a Comment