Thursday, 21 May 2015

சினமின்மை - 5

சினமின்மை - 5



இளையான் அடக்கம் அடக்கம்; கிளைபொருள்

இல்லான் கொடையே கொடைப்பயன்?  எல்லாம்

ஒறுக்கு மதுகை உரனுடை யாளன்

பொறுக்கும் பொறையே பொறை .




இளையான்           -  வாலிபர்
கிளை                   -  நிறைந்த
ஒறு                      -  தண்டனை
உரன்                    -  உறுதி 
மதுகை                 - பலம்; வலிமை 



வாலிப பருவத்தில் கொண்ட  புலனடக்கமே அடக்கம் எனப்படும். 
நிறைந்த பொருள் இல்லாதவன் கொடுத்த தானமே பயனுள்ள தானம் ஆகும்.
எல்லா எதிர்ப்புகளை வெல்ல வலிமையையும், உடல் மற்றும் உள்ளம் உறுதியும் கொண்டவனது பொறுமையே பொறுமை எனப்படும்.



Young man's self-restraint is self-restraint. The charity from a man who has no wealth is the most useful charity. 
When a man has all means to punish every fault but still forbears is the most patient person.

No comments:

Post a Comment