Thursday, 21 May 2015

சினமின்மை - 4

சினமின்மை - 4




நேர்ந்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்

வேர்த்து வெகுளார் விழுமியோர்  - ஓர்த்ததனை

உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்

துள்ளி த்தூண் முட்டும் ஆங் கீழ்.



நேர்த்து               -   எதிர்த்து
நீரல்ல               -    தீய சொற்களை
வேர்த்து             -    மனம் புழுங்கி
வெகுளார்          -   சினம் / கோபம் கொள்ளார்
ஓர்த்து               -   ஆராய்ந்து 
உள்ளி                - எண்ணி 
விழுமியோர்      - சிறந்த மனிதர்கள்
கீழ்                     - கீழ் மக்கள்




சமூக நிலையில் தாழ்ந்த ஒருவன், எதிர்த்து தீய வார்த்தைகள் பேசினால், அதை பொருட்படுத்தாமல், கடுங்கோபம் கொள்வதில்லை மேன்மக்கள்.
கேட்டவைகளை ஆராய்ந்து மனதினுள் சிந்தித்து ஊர் கேட்கும்படி கூச்சலிட்டு  துள்ளி தூணில் முட்டுவார்கள் கீழ்மக்கள்.




When inferior men confront and speak unguarded words, the wise men ignore them & do not get angry with them.
The base man will brood over it, chafe and rave for all the town to hear, leap and dash his head against the post.


No comments:

Post a Comment