Friday, 22 May 2015

சினமின்மை - 10

சினமின்மை - 10




கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற்

பேர்த்து நாய் கௌவினார் ஈங்கில்லை; - நீர்த்தன்றிக்

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ,

மேன்மக்க டம்வாயான் மீட்டு?




கூர்த்து              -    வெறி கொண்டு 
பேர்த்து             -     பதிலடி 
நீர்த்து               -     முறையானது 
மீட்டு                -     பதிலாக 




வெறி கொண்ட நாய் தம் உடம்பை கௌவிக் கொள்வதைக்  கண்டும், தம் வாயால் நாயை கௌவிக் கொள்பவர் யாரும் இவ்வுலகில் இல்லை.
முறையில்லாமல் கீழ்மக்கள் கெட்ட  வார்த்தைகள் பேசியதற்காக,
மேன் மக்கள் தங்கள் வாயால் அவர்களை கெட்ட  வார்த்தைகளால் திட்டுவார்களோ?





Though a rabid dog  lay hold of a man, no one in this world would, in return, bite the dog with their mouth.
Similarly, when a base man speaks unfitting cuss words, will high-minded men reply with similar words with their mouth?




No comments:

Post a Comment