Saturday, 23 May 2015

பொறையுடைமை - 10

பொறையுடைமை  - 10




தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க ; தன்னுடம்பின்

ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க ; வான் கவிந்த

வையகம் எல்லாம் பெறினும் உரையற்க

பொய்யோ டிடைமிடைந்த சொல் !



தக்கார்                  -  உரியவர்
உண்ணற்க            -  உண்ணாதிருங்கள்
கவிந்த                  -   சூழ்ந்த 
உரையற்க             -  பேசாதிருங்கள்
இடைமிடை          -  இடையிடையே



தனக்கு கெடுதல் வந்தாலும், தகுதி உடையோருக்கு கேடு செய்ய எண்ணாதிருங்கள். தன் உடம்பின் சதை பசியால் உலர்வதானாலும், தகாதவர் கையிலிருந்து உண்ணாதிருங்கள். 
வானம் சூழ்ந்த உலகம் முழுதும் பெறுவதாக இருந்தாலும், இடையிடையே பொய் கலந்து பேசாதிருங்கள்.




Even if  you are ruined, do not even think about ruining the just.
Even if your body's flesh waste away, do not eat from the hands of the unfit.
Even if you are bound to gain the whole world over-arched by heaven, never speak words with falsehood mixed.


No comments:

Post a Comment