Thursday, 14 May 2015

தூய்தன்மை - 9

தூய்தன்மை - 9




கழிந்தார் இடுதலை கண்டார் நெஞ்சுட்கக்

குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி  - ஒழிந்தாரைப்

போற்றி நெறி நின்மின் இற்றிதன் பண்பென்று

சாற்றுங்கொல் சாலச் சிரித்து.




கழிந்தார்           -    இறந்தார்
இடுதலை         -    அடக்கம் செய்வதை
நெஞ்சுட்க         -    உள்ளத்தில்
ஆழ்                  -   ஆழமான
ஒழிந்தாரை      -    இறந்தவரை
நெறி                 -     வழி; முறை
பண்பு                 -     இயல்பு
சாற்று               -      அறிவித்தல்




இறந்தாரைக் அடக்கம் செய்வதைக் கண்டோர், இடுகாட்டில் மண்டை ஓடுகளில் பள்ளமாய் ஆழ்ந்திருக்கின்ற கண்ககளைக் கண்டு, உள்ளத்தில் அஞ்பவர்களிடம், "நெறியோடு நின்று, அறம்  செய்யுங்கள் ! இவ்வாழ்வின் இயல்பு இத்தகையது" என்று சிரித்து சொல்வதைப்போல் உள்ளது.




The skulls of the dead with deep cavernous eyes appear,in the burial ground, leaves the gazer aghast. And grinning to those who see, those skulls seems to say "Guard well ! In virtuous path stand fast. The is the body's grace and worth"

No comments:

Post a Comment