Friday, 29 May 2015

ஈகை - 8

ஈகை  - 8




எற்றகை மாற்றாமை என்னானுந் தாம்வரையா

னாற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின் -

மலிகடற் றண்சேர்ப்ப !  - மாறீவார்க் கீதல்

பொலிகடன் என்னும் பெயர்த்து.




மாற்று                        -   மறுத்தல் 
என்னானும்                -   எதுவானாலும்
ஆற்றாதார்                 -   ஏழை / (முடியாதவர்கள்)
ஆற்றின்                     -   செய்தால்
மலி                           -   நிறை
மாறீ                          -   பிரதி
பொலிகடன்               -   வட்டிக்கடன் 




நிறைந்த கடலின் குளிர் கரை கொண்ட நாட்டின் அரசனே ! ஏந்திய கைக்கு மறுக்காமல், எதுவானாலும் தான் அளவை வரையறை வைக்காமல், ஏழை மற்றும் உதவியற்றவர்களுக்கு  கொடுப்பது ஆண்களின் கடமை. மற்றவர்களுக்கு கொடுப்பது வட்டிக்கடன் கொடுப்பது ஆகும்.




King of the swelling seas's cool shore ! Saying 'no' to the outstretched hands of the poor and helpless, without setting any limit on Charity, is the duty of every man. Giving to all others is usury.


No comments:

Post a Comment