Friday, 29 May 2015

ஈகை - 9

ஈகை - 9




இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்

அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க; - முறைப்புதவின்

ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோற்

பைய நிறைத்து விடும்.



இறப்ப                   -    மிகவும்         
என்னா                  -   எண்ணாமல்
முறை                   -  வரிசையாக 
தவின்                   -   கதவு
ஐயம்                    -   பிச்சை 
புகூஉம்                 -   புகும்
தவசி                     -   துறவி
கடிஞை                 -   திருவோடு
பைய                     -   மெதுவாக



கொடுப்பது மிகவும் சிறியது என்று எண்ணாமல், இல்லை என்று சொல்லாமல்,பயனுடைய அறத்தை யாவருக்கும் செய்யுங்கள். வீடு வீடாக சென்று பிச்சை கேட்கும் தவசியின் திருவோடு மெதுவாக நிறைந்து விடும்.




Without saying  'I have very little to give', or 'I have nothing to give', give to all the needy.
Like the begging bowl an ascetic presents from door to door, by small doles it will be filled full.

No comments:

Post a Comment