Saturday, 30 May 2015

பழவினை - 10

பழவினை -  10




சிறுகா, பெருகா, முறைபிறழ்ந்து வாரா,

உறுகாலத் தூற்றாகா, ஆமிடத்தே யாகும்;

சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால்

இறுகாலத் தென்னை பரிவு?




பிறழ்                     -  vary / மாறுபடு
உறுகாலம்             -  உரிய நேரம்
ஊற்று                    -  support  / ஊன்றுகோல்
பொறி                    -  வினை / (தலை) எழுத்து
பரிவு                      -  வேதனை
இறுகாலம்              -  இறுதி நேரம் (மரண நேரம்)




இளம் வயதில் விதிக்கப்பட்ட  வினை (தலை எழுத்து), சிறிதாகாது, பெரிதாகாது, தொடர் வரிசை மாறி வராது, உரிய நேரம் ஊன்றுகோல் ஆகாது, நிகழவேண்டிய இடத்திலேயே நடக்கும். அதனால், இறுதி காலத்தில் துயரப் படுவது ஏன் ?




The fate assigned to you during your early days - do not diminish, does not increase, do not come out of the sequence, does not support you in need. That which have to befall shall happen, then why do you grieve when death approaches?

No comments:

Post a Comment