ஈகை - 6
நடுஊருள் வேதிகைக் சுற்றுக்கோட் புக்க
படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடி கொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றுப் பனை.
வேதிகை - பலிபீடம்
சுற்றுங்கோட் - வேலி
படுபனை - வளமான பனை
அன்னா - அவ்வாறு
பலர்நச்ச - பலர் விரும்ப
குடி - குடும்பம்
கொழு - ஆடம்பர
பலர் விரும்பும்படி வாழ்வோர், நடு ஊருக்குள் பலபீடம் சுற்றிலும் கட்டப்பட்ட வேலிக்குள் இருக்கும் பயன் தரும் பனைமரம் போன்றது.
குடும்பம் செழிப்புடன் வாழும் போதும், தானம் கொடுத்து உண்ணாதவர்கள் சுடுகாட்டில் பிணங்களை எரிக்க பயன்படும் பட்டுப் போன பனைமரம் போன்றது.
Those who live their life as desired by many, are like the fertile palm safety enclosed alongside the alter in the middle of the village.
Those who do not give before they eat, even when they live luxuriously, are like the sterile palm used in the burial ground.

No comments:
Post a Comment