Saturday, 16 May 2015

துறவு - 7

துறவு - 7




ஊக்கித்தாங் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்

தாக்கருந் துன்பங்க டான்தலை வந்தக்கால்

நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்

காக்குந் திருவத் தவர்.




ஊக்கி               -  ஊக்கத்துடன்
விரதம்             -   தவம்
உள்ளுடை       -   உள்ளம் உடைய 
அரும்              -    அரிய
தாக்கரும்        -    தாங்குவதற்கு கடினமான 
தலைவரும்     -   வந்து சேரும் 
நிறூஉம்          -   நிறுவும் / Fix firm
திரு                -    லட்சுமி 
திருவத்தவர்   -  ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் 




ஊக்கத்துடன் தான் கொண்ட விரதங்கள் மனதினுள் உடைய தொடங்கி,
தாங்குவதற்கு கடினமான துன்பங்கள் வந்து சேர்ந்தால், அவைகளை நீக்கி நிறுவும் பலம் உடையோரே  நல் ஒழுக்கத்தை காக்திடும்  ஆசி பெற்றவர்கள் .




When troubles arise so much that becomes hard to bear the pain within your mind it starts to break the vows that was pledged with lofty spirits. 
Those who have the strength to set aside those troubles and firmly fix their soul are the ones who are blessed enough to safeguard virtue.


No comments:

Post a Comment