Thursday, 14 May 2015

தூய்தன்மை - 10

தூய்தன்மை - 10




உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்

செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரை;  - செயிர் தீர்ந்தார்

கண்டிற் றிதன் வண்ணம் என்பதனாற் றம்மைஒர்

பண்டத்துள் வைப்ப திலர்.




போயார்                  -  இறந்தோர்
வெண்டலை         -  மண்டை ஓடு
உட்க                         -  திகைக்கும்படி 
செயிர்                      -  கோபம், குற்றம் 
 செம்மாப்                -  இறுமாப்பு
வண்ணம்                -  வழி
பண்டம்                    -  பாத்திரம்
வைப்ப                      -  மதித்தல்




இறந்தோர் மண்டை ஓடு, பயத்தால் திகைக்கும்படி சிரித்து, இறுமாப்பு கொண்டவரின் குற்றத்தை தீர்க்கும். குற்றம் தீர்த்தார் (மண்டை ஓடைக்  கண்டு) தன் நிலை இவ்வண்ணமே என்பதால், தம் உடம்பை பெரிதாக மதிப்பதில்லை.\




The skulls of the dead, grinning such a way that leaves onlookers aghast, cures the vain lovers of life of their folly. Those who are cured of this folly, seeing the skulls, say ' such is this body' , and so value themselves as nothing.


No comments:

Post a Comment