Thursday, 28 May 2015

ஈகை - 1

ஈகை - 1




இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ள இடம்போற் பெரிதுவந்து - மெல்லக்

கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்

கடையாவாம் ஆண்டைக் கதவு.




இடம்                     -   நேரம்
பெரி                       -   பெரிதாக 
உவந்து                  -    மகிழ்ந்து 
இயைந்த                -   முடிந்த அளவு
கடையாவாம்          -   மூடப்படவில்லை
ஆண்டை                -    சொர்க்கம்




இல்லாத போதும் முடிந்த அளவினால், பொருள் உள்ளபோது செய்ததுபோல், மிகவும் மகிழ்ந்து, இயல்பாக கொடுக்கும் குணத்தொடு ஒன்றுபட்ட மனிதர்களுக்கு சொர்க்கத்தில் உள்ள கதவுகள் ஒருபோதும் மூடுவதில்லை.




Even during adversity, if one gives as per their ability with great happiness, as during the times of their prosperity, the gates of heaven for them is never closed.

No comments:

Post a Comment