Saturday, 30 May 2015

பழவினை - 8

பழவினை - 8



அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்

பழியோடு பட்டவை செய்தல், - வளியோடி

நேய்த னறவுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப !

செய்த வினையான் வரும்.




அறியா                -  அறியாதவர்
பழி                      -   குற்றம் 
வளியோடி           -   சுரவாளி விரைந்து
நெய்த                  -   நீர் தாமரை
நறவு                    -   மணம்
சேர்ப்ப                  -   அரசன் 




சூறாவளி வீசி நீர் மலரிலிருந்து மணம் பரவும் நீண்ட கடல்கரை கொண்ட நாட்டின் அரசனே ! அறியாதவர்கள் அல்ல அவர்கள்; ஆனால்,அறிய வேண்டியவற்றை அறிந்த பின்னும், குற்றம் தரும் செயலை செய்தல், முற்கால செயலின் பயனே !




Lord of the long cool shore, where breezes spread the Lily's fragrance around ! They are not ignorant; in spite of knowing what they should know, if they do deeds that are guilty, its because of deeds of the past.





No comments:

Post a Comment