சினமின்மை - 8
நெடுங்காலம் ஓடினு நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் ; - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம் போற் றானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
நீசர் - கீழ்மக்கள்
வெகுளி - சினம்; கோபம்
பரக்கும் - வளரும்
அடு - சமை
சீர் - நல்லொழுக்கம்
நீண்ட நேரம் தொடர்ந்தாலும் கீழ்மக்களின் கோபம் தணியும் நேரம் இன்றி வளரும்.
சமைக்கும் நேரம் வெப்பம் அடைந்த வெந்நீர் தானாக தணிவது போல் தணியும் நல்லொழுக்கம் கொண்ட மேன்மக்களின் சினம்.
Though base men's wrath runs on for long time, their wrath does not cool down, but spreads.
As the water heated during cooking time cools down automatically, the ire of virtuous men of worth abates.

No comments:
Post a Comment