பழவினை - 7
இடும்பைகூர் நெஞ்சத்தா ரெல்லாருங் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பம்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடற் றண்சேர்ப்ப !
முன்னை விளையாய் விடும்.
இடும்பை - வறுமை
உழல் - திரிதல்
அடம்பம்பூவை அன்னங்கள் கிழிக்கும் குளிர்ந்த அலை வீசும் கடல்கொண்ட நாட்டின் அரசனே ! வருத்தும் வறுமையால் மனமுடைந்து, எல்லாரும் காணும்படி நெடுந்தெருவில் திரிந்து பிச்சை எடுப்பது எல்லாம் முன் நாளில் செய்த தீச்செயலின் பயனே.
Lord of the sea's cool shore, where swans play games by tearing the 'Adambu' flowers ! Due to acute poverty, if some with broken hearts, wander through the long street in sight of all and beg - its due to fruit of bad deeds of olden days.

No comments:
Post a Comment