Saturday, 23 May 2015

பொறையுடைமை - 7

பொறையுடைமை  - 7



பெரியார் பெருநட்புக் கோடறாஞ் செய்த

அரிய பொறுப்ப என் நன்றோ? - அரியரோ -

ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட !

நல்ல செய்வார்க்குத் தமர்?



அரியரோ              -  அரிய
ஒல்லென்             -  'ஒல் ' என்னும் ஓசை.
தமர்                      -   உறவினர் 
வரை                     -    மலை 



ஒல் என்று ஒலிக்கும் அருவிக் கொண்ட உயர்ந்த மலைகலை உடைய நாட்டின் மன்னனே ! பெரியோரின் நட்பை நாடுதல், நாம் செய்த தவறை அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்பதற்கு அல்லவா? கடினமோ, நல்ல காரியங்களை செய்தாருக்கு நெருங்கிய நண்பர்கள் கிடைப்பது?




Lord of the land that has high mountains with resounding waterfalls !!
Is it not the friendship with the great is sought because they bear even the faults we commit?
Is it rare for those who do good deeds, to find close friends?
                                                      

No comments:

Post a Comment