Thursday, 28 May 2015

பிறர்மனை நயவாமை - 7

பிறர்மனை நயவாமை - 7





அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ

வம்பலன் பெண்மரீஇ  மைந்துற்று  - நம்பும்

நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு பாம்பின்

தலைநக்கி அன்ன துடைத்து.





அம்பல்            --   பழிமொழி / அவதூறு / அவமானம்
அயல்               -    சுற்றத்தார் / neighbour
தமர்                  -     உறவினர்
பரீஇ                 -     துக்கப் படுதல்
வம்பலன்          -    சுற்றத்தார்
மரீஇ                -     பலவந்தப்படுத்த
மைந்துற்று       -     மயங்கி
நிலை               -    கட்டுக்கோப்பு
உப்பு                 -    ஒப்பு
உடைத்து          -    சமம் 




அண்டை வீட்டு பெண்ணில் மயங்கி மாசுபடுத்தியவனின் 
சுற்றத்தோர் அவதூறு கூற, உறவினர்கள் அச்சத்தால் துக்கப்பட்டார்கள்.
நம்பும் ஒழுக்கம் இல்லாத மனது உடையவன், பாம்பின் தலையை நக்குவதில் மகிழ்ச்சி காண்பது போன்றது.



Infatuated by his neighbor's wife, a man entered her house & defiles her. As a result, his neighbors spread abroad his guilt & his relatives got scared and mourned. 
Such virtue less men of infirm mind are like those who take pleasure in licking a snake's head.

No comments:

Post a Comment