Friday, 29 May 2015

பழவினை - 1

பழவினை - 1



பல்லாவுள் உய்த்து விடினுங் குழக்கன்று

வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடி கொளற்கு.



பல்லாவுள்     -  பல் (பல) + ஆ (பசு) + உள் (நடுவில்)
உய்த்து          -  கலந்து 
குழம்             -  பச்சிளம்



பல பசுக்களுக்கு மத்தியிலே விட்டாலும் பச்சிளம் கன்று தன் தாயை அறிந்து நாடிக் கொள்ளும் வல்லமை கொண்டது. 
அதுபோல், பழைய காலத்து வினையும் அதனை செய்தவனை பிற்காலத்தில் நாடிக் கொள்ளும்.



If send among many cows, the tender calf has unerring skill to seek out his own mother.
Similarly, the deeds of the olden days have power to search him out to whom their fruit pertains in his later days.

No comments:

Post a Comment