Saturday, 23 May 2015

பொறையுடைமை - 9

பொறையுடைமை  - 9



இன்பம் பயத்தால் கிழிவு தலைவரினும்

இன்பத்தின் பக்கம் இரிந்தைக்க !  -  இன்பம்

ஒழியாமை கண்டாலும் -  ஓங்கருவி நாட !  -

பழிஆகா ஆறே தலை.




பயம்                         -          பலன் /கர்மம்
இரிந்தைக்க               -      ஒழிக
ஒழியாமை                -
ஓங்கருவி                 -   உயர்ந்த அருவி
நாட                          -    நாட்டரசன்
ஆறே                        -    ஒழுக்கம் 



உயர்ந்த அருவி கொண்ட நாட்டின் அரசனே ! இன்பம் தரும் செயலில் இழிவும் வந்தால், இன்பத்தை ஒழிக்கும் வழியில் செயல் படுங்கள். 
இன்பம் விரைவில் ஒழியாது என்று அறிந்தாலும், பழி ஆகாதவாறு ஒழுக்கத்துடன் செயல்படுவதே மேல்.




Lord of the land of high fountains !! If in your deeds of pleasure, you see shameful things come mingled with it, flee from that pleasure's side.
If you see that the pleasure does not cease very soon, to remain guiltless is the best.

No comments:

Post a Comment