Friday, 19 June 2015

கல்வி - 10

கல்வி - 10



அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா

துலகநூல் ஓதுவ தெல்லாங்  - கலகல

கூஉந்துணை அல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந்துணை அறிவார் இல்.




அலகுசால்                    -  அளவற்ற 
கூவும்                           -   இரைக்கும் 




அளவற்ற அறிவை பரப்பும் நூல்களை கற்காமல், உலக அறிவு தரும்  நூல்களை மட்டும்  ஓதுவது, 'கலகல" என்று வெறுமையாக கூவுவது மட்டும் அல்லாமல், வாழ்வின்  தடுமாற்றத்தை போக்கும் முறையை அறிகின்றவர் யாரும்  இல்லை.



If men ignore acquiring infinite knowledge & learn only the worldly literature, it would be like making only empty words. But cannot  acquire that wisdom by which they can remove the difficulties they may face in life.       



கல்வி - 9

கல்வி - 9



கல்லாரே ஆயினுங் கற்றோரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர்; - தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.




தலைபடுவர்                  -  முன்னேறுவர்
தொல்சிறப்பு                  -   பழமையான சிறப்பு
ஒண்ணிற                      -  ஒளிமிக்க நிறம் 
ஒழுகு                           -  கலந்து கொள்ளுதல் 
பாதிரிப்பூ                       -  பாடலம்  பூ
புத்தோடு                       -  புது மண்பானை
பயம்                             -  பலன்




கல்லாதவர்களே ஆனாலும் கற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதால் , நல்லறிவில் நாள்தோறும் முன்னேறுவார்கள் -  ஒளிமிக்க நிறமும் மணமும் கொண்ட  பாதிரிப்பூவை  சேர்வதால்  புதிய மண்பானை தண்ணீருக்கு அம்மணத்தை  தருவது போல !!




Though uneducated, if they mingle among educated people, they can improve their knowledge every day - just as when the 'padri' flower of old renown, with  bright hue & aroma, mingles with the new earthen pot, spreads the fragrance to the water in the pot !!


கல்வி - 8

கல்வி - 8



கனைகடற் றண்சேர்ப்ப ! கற்றறிந்தார் கேண்மை 

றுனியிற் கரும்பு தின்றற்றே; றுனிநீக்கித் 

தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா 

ஈரம் இலாளர் தொடர்பு.



கனை                    -    அறை / ஒலி  
கேண்மை              -    நட்பு 
நுனி                       -   குருத்து 
தூர்                        -   வேர் / root  
ஈரம்                       -   பாசம் / அன்பு 



ஒலிக்கும் கடலின் குளிர்ந்த கரை கொண்ட நாட்டின் அரசனே ! கற்று அறிந்தவர்கள் உடன் ஆன நட்பு, கரும்பின் (சாறுள்ள) நுனியை தின்பது போன்றது; நுனியை நீக்கி கரும்பின் அடிப் பகுதியை தின்பது போன்றது, பண்பும், பாசமும் இல்லாதவர்களுடன் கொண்ட தொடர்பு.



Lord of the cool shores of resounding sea !! Friendship with learned men is like eating from the tender & juicy tip of sugarcane; association with men without courtesy or feelings is like leaving the tip & eating from the hard & dry lower part of sugarcane. 


Thursday, 18 June 2015

கல்வி - 7

கல்வி - 7



தவலருற் தொல்கேள்வித் தன்மை யுடையார்

இகலிலர் எஃகுடையார் நம்முட் குழீஇ

நகலின் இனிதாயிற் காண்பாம் - அகல்வானத்

தும்பர் உறைவார் பதி.




தவல்                        -  தவறல் 
அரும்                       -  அரிய
தொல் கேள்வி          -   பழமையான கேட்கப்படும் தத்துவம் 
தன்மை                    -   தத்துவம்
இகல்                        -    பொறாமை போட்டி 
எஃகு                         -   கூர்மை
உம்பர்                       -   தேவர்
உறை                        -   வசிப்பவர்
பதி                            -   பட்டினம்




தவறாத  பழமையான நூல் கேள்வியறிவு தன்மையும், பொறாமை மற்றும்  போட்டி இல்லாத கூர்மையான ஞானம் கொண்டவர்கள் குழுவில் சேர்ந்து அளவளாவி மகிழ்வதை விட இன்பம் உண்டானால் - அதை விரிந்த வானத்தில் தேவர் வசிக்கும் பட்டினத்தில் காண முயல்வோம் !




If there is any greater bliss  that is better than the pleasure in assembly of scholars with unfailing knowledge of old (verbal) literature par excellence, exempt from rivalry - let's see if we can find that in the city above the vast sky inhabited by the immortals.



Tuesday, 9 June 2015

கல்வி - 6

கல்வி - 6



தோணி இயக்குவான் றொல்லை வருணத்துக்

காணிற் கடைப்பட்டான் என்றிகழார்; - காணாய் !

அவன் றுணையா ஆறு போயற்றே, நூல்கற்ற

மகன்றுணையா  நல்ல கொளல் !




வருணம்                        - குலம் ; சாதி
றொல்லை                     - தொல்லை;




தோணி இயக்குபவன் பழைய சாதியால் பின்பட்டவன் என்று இகழ மாட்டார்கள் மேலானோர். கவனியுங்கள் !! தோணி ஓட்டுபவனின் உதவியால் ஆறு கடந்ததுபோல், நல்ல நூல்களை கற்ற மகன் துணையால் மெய் அறிவு பெற்றது போல்.




Though ferryman is from the low caste, as per old traditions, no one despises him. Look ! The way one crosses the river with his help, one learns the good teachings with the help of learned son.

Monday, 8 June 2015

கல்வி - 5

கல்வி - 5



கல்வி கரையில; கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கிற் பிணிபல ; - தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே ! -  நீர்ஒழியப்

பால்உண் குருகிற றெரிந்து !!




தெள்ளிதின்                      -  தெளிவான
குரு                                  -  குருவி/ பறவை 




கல்விக்கு அளவு இல்லை, ஆனால் அதை கற்பவரின் நாட்கள் சிலவே; மெல்ல நினைத்துப் பார்த்தல் அந்த சில நாட்களிலும் பிணிகள் பல. 
தெளிவாக ஆராய்ந்து ஏற்றவைகளையே கற்க அறிந்துக் கொள்ளுங்கள் -  நீரை அகற்றி பாலை மட்டும் பருகும் அன்னத்தைப் போல் 



Education  has no bounds, but days are few; If you think calmly even those few days may be wasted with illness. With clear research, choose the subject which is the most suitable for you - like the swan that filters out the water and drinks the milk.



கல்வி - 4

கல்வி  - 4



வைப்புழிக் கோடப்படா ; வாய்த்தீயிற் கேடில்லை;

மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்;

எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற் றல்ல பிற.




உழி                          -   இடம்
ஓட்படா                    -   அகற்ற முடியாது 
வாய்த்தீயிற்             =  வாய்த்து  + ஈயில்
செறின்                     -  கோபம் கொண்டால்
வவ்வார்                   -   அபகரிப்பார் 
விச்சை                     -   வித்தை 



வைத்த இடத்திலிருந்து அகற்ற முடியாது; தமக்கு கிடைத்ததை பிறருக்கு கொடுத்தால் அழிவதில்லை; மிக பலசாலியான அரசரும் கோபம் கொண்டும் அபகரிக்க முடியாது; தன் மக்களுக்கு என சேர்த்து வைப்பதில் கல்வியைத் தவிர வேறு எதுவும் இல்லை.




It cannot be taken away from it's place; It does not perish if given to anyone else; The most powerful King, even out of anger, cannot take it way with force; The best a man can provide for his children as legacy is education. Nothing else is real wealth.



கல்வி - 3

கல்வி - 3




களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;

கடைநிலத்தோர் ஆயினுங் கற்றறிந் தோரைத்

தலைநிலத்து வைக்கப் படும்.




களர்நிலம்       -  உவர்நிலம்
விழுமி            -  சிறந்தது
கடைநிலம்      -   தாழ்ந்த நிலை




உப்பு நிலத்தில் உற்பத்தி செய்த உப்பினை, சான்றோர்,  விளை நிலத்தின் நெல்லை விட மேலானதாக கொள்வர்; பிற்படுத்தப்பட்ட குடும்பத்தினர் ஆனாலும் கற்று அறிந்தோரை தலை சிறந்தவர்களாக மதிக்கப்  படுவார்கள்.




The excellent men consider the salt produced in the salty land to be better than the rice from fertile soil. The learned men from the backward communities would be treated better than those from the highest community.





கல்வி - 2

கல்வி - 2




இம்மை பயக்குமால், ஈயக் குறைவின்றால்,

தம்மை விளக்குமாற், றாம் உளராக் கேடின்றால்,

எம்மை உலகத்தும் யாங்காணேங் கல்விபோல்

மம்மா அறுக்கு' மருந்து.



பயக்குமால்                      -  பயன் தருவதால் 
உளர்                                -  உள்ளார்
எம்மை உலகத்தும்           - எல்லா உலகத்திலும்
மம்மா                              -  மயக்கும்



இதே  வாழ்வில் பலன் தருவதால், கொடுத்தாலும் குறையாததால், தம் அறிவால் வாழ்வில்  ஒளி தருவதால், அது உள்ளவரை  கேடு இல்லை என்பதால் முழு உலகத்திலேயும் நாம் காண்பது : கல்வி போல் அறியாமை மயக்கத்தை போக்கும் மருந்து வேறில்லை.




Since, in this same world it is useful, does not diminish even when imparted to others, enlightens us, it does not perish as long as you possess it - in this whole world we see Education as the best medicine that cures delusions of ignorance.

கல்வி - 1

கல்வி  - 1



குஞ்சி அழகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல; - நெஞ்சத்து

நல்லம்யாம் என்று' நடுவு நிலையாமையால்

கல்வி அழகே அழகு.



குஞ்சி                     -  முடியின் சடை ; பின்னல் 
ஆனை                   - ஆடை;
கோட்டு                  -  fold ; plait
நடுவு                      -  நடு




முடிச்  சடையின் அழகும், மடித்து அணியும் ஆடையின் பின்னல் அழகும், மஞ்சள் பூசினதால் வந்த அழகும் அழகல்ல. 'நாம் நல்லவர்' என்று நெஞ்சத்தால் உணர்த்தும் நடு நிலையாமை தருவதால் கல்வி அழகே உண்மையான அழகு.




Beauty of hair locks, beauty of circular garment folds & its plaits, beauty on applying turmeric  are not true beauty. Conscience of impartial mind that tell us "we are good" that learning brings is the real beauty.




Saturday, 6 June 2015

தீவினையச்சம் - 10

தீவினையச்சம்  -  10




மனைப்பாசம் கைவிடாய்; மக்கட்கென்  றேக்கி

எனைத்தூழி வாழ்த்தியோ, நெஞ்சே ? - எனைத்தும்

சிறுவரையே ஆயினுஞ் செய்தநன் றல்லால்

உறுபயனோ இல்லை உயிர்க்கு.




ஏக்கி                            -  ஏங்கி
எனை                          -  எத்தனை
ஊழி                            -  காலம்
உறு                             -  உருப்படியான 




குடும்பத்தின் மீதான பாசத்தை கைவிடாதே. குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவைகளை நினைத்து ஏங்கி இன்னும் எத்தனை காலம் வாழப் போகிறாய், நெஞ்சே !! எத்தனை சிறியவையே ஆனாலும், அறச்செயல்கள் அன்றி உயிருக்கு வேறு வழியில் பயன் இல்லை.




Do not cut-off your family ties. How many years will you worry about your duties to your children? O mind ! However small it might be, without your deeds of charity, there's no gain for your soul.




தீவினையச்சம் - 9

தீவினையச்சம் - 9




ஒக்கிய ஒள்வாடன் னென்னார் கைப் பட்டக்கால்

ஊக்கம் அழிப்பதூஉ' மெய்யாகும்; - ஆக்கம்

இருமையுஞ் சென்று சுடுதலா னல்ல

கருமமே கல்லார்கட் டீர்வு.




ஒக்கிய               - தூக்கிய
ஒள்                    -  பிரகாசம்
வாள்              
ஊக்கம்               -  பலம்
ஆக்கம்               -   அதிகரித்தல்
சுடு                     -   எரி



உயர்த்திய ஒளிரும் வாள், பகைஞர் கைப் பட்டால், மனதின் ஊக்கத்தையும் அழிப்பது நிச்சயம். அதிக செல்வம் (மூடர்கள் கை பட்டால்) இம்மையிலும்  மறுமையிலும்  உள்ள பலனை எரிப்பதால், அறிவில்லாதவர்களிடம் உள்ள நட்பை விலக்கி கொள்தல் நல்லது.




If the glittering sword of one falls into the hands of his enemies, he will surely lose his mental strength to fight. Similarly, since increase in wealth (in the hands of fools) will go and burn up both worlds; so better stay away from the fools.

தீவினையச்சம் - 8

தீவினையச்சம் - 8



உள்ளதா னள்ளா துறுதித் தொழிலராய்க்

கள்ளத்தா னட்டார் கழிகேண்மை  - தெள்ளிப்

புனற் செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட !

மனத்துக்கண் மாசாய் விடும்.




உள்ள                  - உள்ளத்தால்
உறுதி                  -  பலம் / ஸ்திரம்
நட்டார்                -  நண்பர்
நள்ளாது              - நண்பராய் ஏற்றுக்கொள்ளாது
கள்ள                   - கள்ளம் / வஞ்சனை
செதும்பு               - வழுக்கு நிலம்
மாசு                    -  குற்றம்
கழிகேன்மை       -  நெருங்கிய நட்பு
தெள்ளி               -  வீசுதல்
புனற்                   -   நீரோட்டம்
மாசு                    -   குற்றம்




நீர்ரோட்டம்  சேற்றை அலைத்தொதுக்கும் பூக்கள் உடைய  குன்றுகள் கொண்ட நாட்டின் அரசனே ! உள்ளத்தால் நட்பு கொள்ளாமல், உறுதியான சில செயல்களால் வஞ்சனையாக நட்பு காட்டுவது, மனதில் பெரும் குற்றம் உடையதாகி விடும்.




Lord of the flowery hills, where streams wash out slippery sand from their way ! Those who do not have friendship from their heart, but show certain deeds to show off their fake friendship,will have crime in their minds.



Friday, 5 June 2015

தீவினையச்சம் - 7

தீவினையச்சம் - 7




யாஅ ரொருவர் ஒருவர்தம் முள்ளத்தைத்

தேருந் துணைமை உடையவர்? -  சாரல்

கனமணி நின்றிமைக்கு' நாட, கேண் ! - மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு.





யா                              -    யார்
தேரும்                        -    கேட்கும்
துணைமை                  -     சாதகம்
சாரல்                          -     மலைச் சரிவுகள்
மணி                           -     மாணிக்கம் 
இமைக்கும்                  -     ஒளிவிடும் 



யார் ஒருவர் மற்ற ஒருவரின் உள்ளத்தை அறியும் திறமை உடையவர்?
மலைச்சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாட்டின் அரசனே, கேள்! மக்களின் மனம்  வேறு, அவர்கள் செயல்கள் வேறு.




Which man has the ability to know the inmost self of other man? Lord of the land where heavy gems glitter on mountain slope, O hear ! - Men's minds are different from their deeds.

தீவினையச்சம் - 6

தீவினையச்சம் - 6




சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச்

சான்றாண்மை சார்ந்தார்க ணில்லாயின்; - சார்ந்தாய், கேள் !

சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்

பாம்பகத்துக் கண்ட துடைத்து.




சார்ந்தாய்                   -   நம்பினாய்
சாந்தகம்                     -   சாந்தம்
செப்பு                          -   செம்பு பெட்டகம்  / copper casket 
உடைத்து                    -    சமம் 




சான்றோர் என நம்பி  சிலரிடம் கூட்டு சேர்ந்தாய். நீ சேர்ந்தவர்களிடத்தில்  சான்றாண்மை காணாவிட்டால், நீ கேள் ! சந்தனம் உண்டு என்று எண்ணி, செம்பு பெட்டகத்தை  திறந்த ஒருவன் உள்ளே பாம்பை கண்டதுக்கு சமம்.




If you make friends with some believing they are great men of integrity, and if you do not find any greatness (of integrity) in them, listen !! You are like the one who opened a casket expecting to find "sandal paste", but found snake inside.

தீவினையச்சம் - 5

தீவினையச்சம் - 5




பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும்; -  வரிசையால்

வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே

தானே சிறியார் தொடர்பு.





நந்தும்                 -  வளரும்
மதியம்                -  முழுநிலா
வைகல்               -   நிதம்




சான்றோர்களுடன்  உண்டான நட்பு நிலாவின் பிறை போல் நிதமும் முறையாக வளரும்; சிறியோர்கள் உடன் உண்டான நட்பு, வானத்தில் உள்ள முழு நிலாவைப் போல் நிதமும் வரிசையாக தேய்ந்து ஒழியும்.




Friendship with great men is like the crescent moon, which grows daily by degrees.
Friendship with mean men are like the full moon in the sky that daily dwindles till it vanishes.

தீவினையச்சம் - 4

தீவினையச்சம் - 4





நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉம்

எரிப்பச்சுட டெவ்வநோ யாக்கும்; - பரப்பக்

கொடுவினையர் ஆகுவர் கோடாருங் கோடிக்

கடுவினையர் ஆகியார்ச் சார்ந்து.




அழல்                      -   வெப்பம்
எவ்வம்                    -   பிணி
கோடா                     -   (நெறியிலிருந்து) அகலாதவரும் 
பரப்ப                        -  மிக




நெருப்பின் வெப்பத்தில் சேர்ந்த (மென்மையான) நெய்யும் எரிந்து தீயும்படி சுட்டு மிக்க வருத்தந்தரும் நோயை உண்டாக்கும். நெறியிலிருந்து அகலாதவரும் மிக கொடிய செயல்களுக்கு ஆளாகுவார்கள், கடும் செயல்கள் செய்வோரை சேர்ந்தால்.



Even soft things like ghee, when poured into fierce heat of fire, will braze and burn and cause bitter anguish. Similarly, even upright men would commit deeds of utter evil, when they attach themselves to those deeds are evil. 

தீவினையச்சம் - 3

தீவினையச்சம் - 3




அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித்

துக்கத் தொழுநோ யெழுபவே - அக்கால்

அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற

பழவினை வந்தடைந்தக் கால்.




அக்கே                      - அக்குமணி / conchshell
அங்கை                    - அகங்கை
ஒழிய                       - விட்டுவிடல்
விரல்ழுகித்               -  விரல் + அழுகி
அக்கால்                    -  முற்காலத்தில் 
தொழுநோய்              -  குஷ்ட நோய் 
அலவன்                    -   நண்டு
கான்                          -   கால்




முற்காலத்தில், நண்டை உண்ண விரும்பி, அதன் கால்களை முறித்துத்  தின்ற பழைய தீய செயலின் பலன் வந்தால், அக்குமணி போல் வெள்ளை நிறத்தில் அகங்கை தவிர விரல்கள் எல்லாம் அழுகி  துக்கம் அடையும்படி தொழுநோய் உண்டாகும்.




To satisfy their desire for crab food, some caught the crabs and broke their joints, in the olden lives. In their next life, leaving  their palms, as white as conch shells, all their fingers would rot away and would suffer leprosy.

தீவினையச்சம் - 2

தீவினையச்சம் -2



இரும்பார்க்குங் காலராய் எதிலார்க் காளாய்க்

கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்கும்

காட்டுளாய் வாழுஞ் சிவலுங் குறும்பூழும்

கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.




இரும்                     -  இரும்பு
காலராய்                -  கால்கள் உடையவர்
எதிலார்                  -  எதிரிகள்
ஆள்                       -  அடிமை
கரும்பார்                -   கருமை மண்
கழனி                     -   வயல்
சுரும்                      -   வண்டு 
ஆர்க்கும்                 -   ஆரவாரிக்கும்
சிவல்                      -    கௌதாரி
குறு                         -    சிறிய
பூழ்                          -   காடை / சிறிய கௌதாரி




வண்டுகள்  ஆரவாரிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டில் இருந்து வருந்தும்படி கூட்டுக்குள் அடைத்து  வைப்பவர்கள், மறு பிறவியில் இரும்பு விலங்குகளால் கால்கள் கட்டப்பட்டு, எதிரிகளின் அடிமைகளாய் கரும் மண் கொண்ட வயல்களில் கடினமாக உழைப்பார்கள்.




Those who snare patridges and quail, that live in the wild where beetles hum, and keep them in cages, will be caught and their legs would be shackled and made to do hard work in fields of back soil by their enemies.

தீவினையச்சம் - 1

தீவினையச்சம் - 1



துக்கத்துட் டூங்கித் துறவின்கட் சேர்கலா

மக்கட் பிணத்த சுடுகாடு; - தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்குங் காடே புலன்கெட்ட

புல்லறி வாளர் வயிறு.




துக்கம்                       -   சோகம் தரும் உலக செயல்கள்
தூங்கி                        -   மயங்கி 
சேர்கலா                    -  சேராத
தொக்க                      -  ஒன்று கூடி
புள்ளி                        -  பறவை
புலன்கெட்ட              -  அறிவற்ற
புல்லறிவாளர்           -  அற்பமான அறிவு



துக்கம் தரும் உலக செயல்களுள் மயங்கி கிடந்து, துறவு வாக்கையில் ஈடுபடாமல் வாழ்ந்த மக்களின் பிணங்கள் வரும் இடம் தான் சுடுகாடு.
எல்லா விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இடுகாடாக அமைவது அறிவற்ற, அற்பமான அறிவை உடையவர்களின் வயிறு.




The burial ground is filled with bodies of men who lived among sorrows, but never gave themselves to a ascetics' lives. Foolish and perverted men's belly was the burial ground of most animals and birds.

மெய்ம்மை - 10

மெய்ம்மை - 10



தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற்

றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை; - ஆங்குத்தாம்

போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே

கூற்றங்கொண் தோடும் பொழுது.





தேர்                          -  ஆராய் 
பிறிதில்லை             -  வேறில்லை 
கூற்றம்                    -  மரணம் 
புனைந்த                  -  அலங்கரித்த 




எவ்விடத்தில் ஆராய்ந்துப் பார்த்தாலும் , தம் செயல்களின் பலனைத் தவிர தம்மோடு செல்வது வேறு எதுவும் இல்லை. 
தான் புகழ்ந்தும், அலங்கரித்தும் உடம்பும் பயன் இல்லாமல் போகும், மரணம் தம் உயிரை கொண்டு ஓடுச்  செல்லும் போது .




Research wherever you will, nothing goes with a man, except the fruits of his deeds.
The body, which a man admires and adorns, itself is useless, when death seizes his life and runs away with it.









மெய்ம்மை - 9

மெய்ம்மை -  9




யாஅர் உலகத்தோர் சொல்லில்லார் ? தேருங்கால்

யாஅர் உபாயத்தின் வாழாதார்? யாஅர்

இடையாக இன்னாத செய்தாதார்? யாஅர்

கடைபோகச் செல்வம் உய்த்தார்?





சொல்                -  நிந்தை 
உபாயம்             -  முயற்சி / தொழில் 
கடைபோக         -  கடைசி வரை
உய்த்தார்           -  செலுத்து




ஆராய்ந்துப் பார் !! உலகத்தில் பழிச்சொல் இல்லாதவர் யார்? தன் தொழிலால் வாழாதவர் யார்? வாழ்வின் மத்தியில் துன்பங்கள் சந்திக்காதவர்கள் யார்? கடைசி வரை செல்வதை அனுபவித்தவர்கள் யார்?




Consider this !! Who in this world has not been rebuked? Who has lived without working? Who in his course of life has not seen grief? Who has enjoyed their wealth till the end of their life?


மெய்ம்மை - 8

மெய்ம்மை - 8



ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த

பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்

ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்

உருவு பலகொளல் ஈங்கு !!




ஆ                         -  பசு




பசுக்கள் வேறுவேறு உருவத்தில் (நிறத்தில்)  இருந்தாலும், அப்பசுக்கள் தரும் பால் வேறு நிறத்தில்  அல்லாமல், ஒரே நிறத்தில் உள்ளது. பால் போல், ஒரே தன்மையை கொண்டது நல்ல நீதி. பசுவைப்போல, நல் நீதியை கற்பிக்கும் முறை பல உருவங்களில் இங்கு உள்ளன !




Though cows are in different types (and colors), the milk they yield is not diverse, but of same color. Like milk, morality is of the same type, but , like those cows,  the ways they are taught are diverse.

மெய்ம்மை - 7

மெய்ம்மை - 7




தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க !

என்னை அவரொடு பட்டது ? - புன்னை

விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப ! -

உறற்பால யார்க்கும் உறும்.




முன்னிகழ்க                 =  முன் + இகழ்க
விறல்                           -  செழிப்பு
கானல்                          -  சோலை
சேர்ப்ப                          -   கரை
உறற்                            -    நிகழும் 




புன்னையின் செழிப்பு  வாய்ந்த மலர் மணம்  கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரை கொண்ட நாட்டின் அரசனே! 
நம்மை இகழ்வோரை அவர் முன்னே நீங்களும் இகழுங்கள் !
அவருடன் தொடர்பு ஏன் ? நிகழ வேண்டியவை எல்லோருக்கும் நிகழும்.




Lord of the seashore where aroma from the abundant 'punnai' flowers fill the shores ! When men abuse you, you too abuse them before their faces! What you have got to do with them? What fate awaits you comes to everyone !!



மெய்ம்மை - 6

மெய்ம்மை - 6



இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்

அடங்காதார் என்றும் அடங்கார்; -  தடங்கண்ணாய் !

உப்பொடு நெய்பா  றயிர்காயம் பெய்தடினுங்

கைப்பறா பேய்ச்சுரையின் காய்.




இடம்பட                   -    செழிப்பாக
பாறயிர்                     -    பால் + தயிர்
கைப்பறா                  -    கசப்பு/  கைப்பு
பேய்ச்சுரை               -     காட்டு சுரைக்காய்



அகன்ற கண்கள் உடையவளே ! அதிகமான மெய் அறிவு நூல்களை படித்திருந்தாலும், ஒழுக்கம் இல்லாதோர் ஒருபோதும்  அடங்குவதில்லை. 
உப்போடு நெய், பால், தயிர், காயம் ஆகியவைகளை சேர்த்து சமைத்தாலும் பேய்ச் சுரைக்காயின் கசப்பு நீங்காது.




O wide-eyed one ! Even if one reads lots of books on true wisdom, those who lack discipline never get disciplined. Though you cook a wild gourd, mixing it with salt, ghee, milk, curds & asafoetida, it never loses its bitterness.




மெய்ம்மை - 5

மெய்ம்மை - 5



நல்லாவின் கன்றாய் னாகும் விலைபெறூஉம் ;

கல்லாரே ஆயினுஞ்  செல்வர்வாய்ச் சொற் செல்லும்;

புல்லீரப் போழ்தி னுழவேபோன் மீதாடிச்

செல்லாவா நல்கூர்ந்தார் சொல்.




நல்லா                      - நல்ல பசு           ( நல் + ஆ)
புல்லீரம்                   - ஈர புல்
உழவு                         
மீதாடி                        - மீது + ஆடி
நல்கூர்                      - ஏழை 




நல்ல பசுவின் கன்று நல்ல விலை பெரும். கல்லாதரே  ஆனாலும், செல்வராய் இருந்தால் அவர் சொல்லும் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும்.
சிறிதளவே ஈரமான புல்லின் மேலோட்டமாக உழுகின்ற  உழவு போல், ஏழையின் சொல், கற்றவரானாலும், எற்றுக் கொள்ளப் படாது.




A good calf fetches good price, if it is born of a good cow. The words from a wealthy man, even if uneducated, is accepted.
Like a plough that merely grazes over a land with scarce moisture, a poor man's words, even if he is educated will not be acceptable.

மெய்ம்மை - 4

மெய்ம்மை - 4




வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

நடுவண தெய்த விருதலையும் எய்தும்;

நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்

தடுவது போலுந் துயர்.



வடு                                      -  குற்றம் 
மன்னிய                               -  அமைந்த
நடுவண                                -  நடுத்தர
விருதல்                                -  இருதலை
உலை                                   -  அடுப்பு
அடு                                       -  சமை




குற்றமில்லா இந்த உலகத்தில் நிலைக்கும் மூன்றில் - அறம், பொருள், இன்பம் - நடுவிலான  வாழ்வை விரும்பியவன் மற்ற இரண்டையும் பெறுவான்.
பொருளை பெறாதவன் வாழ்க்கை உலையில் இரும்பை காய்ச்சுவதைப் போன்ற தும்பத்தை பெறுவான்.




In this faultless world, there are three things that endure - Virtue, Wealth & Enjoyment. Those who gains the midmost way (of wealth), gets the most of the other two also. Those who are not interested in gaining any wealth, suffer like the iron plate placed on a kitchen hearth.