கல்வி - 7
தவலருற் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலிலர் எஃகுடையார் நம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் - அகல்வானத்
தும்பர் உறைவார் பதி.
தவல் - தவறல்
அரும் - அரிய
தொல் கேள்வி - பழமையான கேட்கப்படும் தத்துவம்
தன்மை - தத்துவம்
இகல் - பொறாமை போட்டி
எஃகு - கூர்மை
உம்பர் - தேவர்
உறை - வசிப்பவர்
பதி - பட்டினம்
தவறாத பழமையான நூல் கேள்வியறிவு தன்மையும், பொறாமை மற்றும் போட்டி இல்லாத கூர்மையான ஞானம் கொண்டவர்கள் குழுவில் சேர்ந்து அளவளாவி மகிழ்வதை விட இன்பம் உண்டானால் - அதை விரிந்த வானத்தில் தேவர் வசிக்கும் பட்டினத்தில் காண முயல்வோம் !
If there is any greater bliss that is better than the pleasure in assembly of scholars with unfailing knowledge of old (verbal) literature par excellence, exempt from rivalry - let's see if we can find that in the city above the vast sky inhabited by the immortals.

No comments:
Post a Comment