தீவினையச்சம் - 6
சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்க ணில்லாயின்; - சார்ந்தாய், கேள் !
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
சார்ந்தாய் - நம்பினாய்
சாந்தகம் - சாந்தம்
செப்பு - செம்பு பெட்டகம் / copper casket
உடைத்து - சமம்
சான்றோர் என நம்பி சிலரிடம் கூட்டு சேர்ந்தாய். நீ சேர்ந்தவர்களிடத்தில் சான்றாண்மை காணாவிட்டால், நீ கேள் ! சந்தனம் உண்டு என்று எண்ணி, செம்பு பெட்டகத்தை திறந்த ஒருவன் உள்ளே பாம்பை கண்டதுக்கு சமம்.
If you make friends with some believing they are great men of integrity, and if you do not find any greatness (of integrity) in them, listen !! You are like the one who opened a casket expecting to find "sandal paste", but found snake inside.

No comments:
Post a Comment