தீவினையச்சம் - 8
உள்ளதா னள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தா னட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற் செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட !
மனத்துக்கண் மாசாய் விடும்.
உள்ள - உள்ளத்தால்
உறுதி - பலம் / ஸ்திரம்
நட்டார் - நண்பர்
நள்ளாது - நண்பராய் ஏற்றுக்கொள்ளாது
கள்ள - கள்ளம் / வஞ்சனை
செதும்பு - வழுக்கு நிலம்
மாசு - குற்றம்
கழிகேன்மை - நெருங்கிய நட்பு
தெள்ளி - வீசுதல்
புனற் - நீரோட்டம்
மாசு - குற்றம்
நீர்ரோட்டம் சேற்றை அலைத்தொதுக்கும் பூக்கள் உடைய குன்றுகள் கொண்ட நாட்டின் அரசனே ! உள்ளத்தால் நட்பு கொள்ளாமல், உறுதியான சில செயல்களால் வஞ்சனையாக நட்பு காட்டுவது, மனதில் பெரும் குற்றம் உடையதாகி விடும்.
Lord of the flowery hills, where streams wash out slippery sand from their way ! Those who do not have friendship from their heart, but show certain deeds to show off their fake friendship,will have crime in their minds.

No comments:
Post a Comment