கல்வி - 9
கல்லாரே ஆயினுங் கற்றோரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்; - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
தலைபடுவர் - முன்னேறுவர்
தொல்சிறப்பு - பழமையான சிறப்பு
ஒண்ணிற - ஒளிமிக்க நிறம்
ஒழுகு - கலந்து கொள்ளுதல்
பாதிரிப்பூ - பாடலம் பூ
புத்தோடு - புது மண்பானை
பயம் - பலன்
கல்லாதவர்களே ஆனாலும் கற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதால் , நல்லறிவில் நாள்தோறும் முன்னேறுவார்கள் - ஒளிமிக்க நிறமும் மணமும் கொண்ட பாதிரிப்பூவை சேர்வதால் புதிய மண்பானை தண்ணீருக்கு அம்மணத்தை தருவது போல !!
Though uneducated, if they mingle among educated people, they can improve their knowledge every day - just as when the 'padri' flower of old renown, with bright hue & aroma, mingles with the new earthen pot, spreads the fragrance to the water in the pot !!

No comments:
Post a Comment