Friday, 15 May 2015

துறவு - 6

துறவு - 6



மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்

பூண்டான் கழித்தற் கருமையால், - பூண்ட

மிடிஎன்னுங் காரணத்தின் மேன்முறைக் கண்ணே

கடி என்றார் கற்றறிந் தார்.



மாண்ட               -   மேலான / sublime
பூண்டான்            -    திருமணம் செய்தவன் 
கழித்தல்              -    துண்டித்தல் 
அருமை              -    அரிது / கடினம்.
மிடி                     -    துன்பம் 
மேன்முறை         -     முன் காலத்தில் 
கடி                      -     மணம் 



மேன்மையான குணமும், குழந்தை பேரும்  மனைவியிடம் இல்லை என்றாலும், மணம் செய்தவன் மண வாழ்வை துண்டித்தல் கடினம்.
மண வாழ்வே  துன்பம் என்னும் காரணத்தால் முற்காலத்தில் 'திருமணம் தவிர்த்துக்கொள்' என்றனர் கற்று அறிந்தவர்கள். 




Though your wife does not possess great qualities or blessed with children, it is hard to sever marriage bond. Due to this, marriage is a cause of sorrow, in olden days learned men told to avoid married life.


No comments:

Post a Comment