Friday, 29 May 2015

ஈகை - 4

ஈகை - 4




இம்மி அரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுதுண்மின் ! - உம்மைக்

கொடாஅ தவர்என்பர் குண்டுநீர் வையத்

தடாஅ அடுப்பி னவர்.




வைகல்                -   தினந்தோறும்
நும்மில்                -   உங்களில்
இயைவ                -   முடிந்தவரை
உம்மை                -   மறு உலகில்
குண்டுநீர்              -   நீர் சூழ்ந்த
வையம்                -   உலகம்
அடாஅ                  -   சமைக்கப்படாத




இம்மி அளவு அரிசி ஆனாலும், நிதமும் உங்களால் இயன்ற அளவு கொடுத்தபின் உண்ணுங்கள்.  மறு உலகில், நீர் சூழ்ந்த இந்த உலகில், கொடுக்காதவர்கள் சமைக்க படாத அடுப்பு பெற்றவர்கள் .




Even if you give a fraction of a grain of rice, daily to the best of your ability eat after you give to the needy. In the other world, if you give not in this world surrounded by deep waters, nothing can be cooked in your hearth.



No comments:

Post a Comment