Friday, 15 May 2015

துறவு - 4

துறவு - 4




துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை

இன்பமே காமுறுவர் ஏழையார்;  - இன்பம்

இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா

றடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.




இன்னாமை              -     துன்பம் 
காமுறுதல்               -     இச்சித்தல் 
இடை தெரிதல்         -     முழுமையாக அறிதல் 
மனையா                  -    இல்வாழ்க்கை
அடை                       -    அடைதல்
ஆன்று                      -     முழுமையாக 




பல நாட்கள் துன்பங்களை சகித்தாலும், அறிவில்லாதோர்  ஒரு நாளின் இன்பத்தையே விரும்புவார்கள். 
இன்பத்தை முழுமையாக அறிந்தவர்கள், இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், துன்பத்தை முழுமையாக  ஏற்றுக் கொள்வார்கள்.




Though suffered many days of affliction, the fools desire one day of pleasure.
The wise who are fully aware of pleasure, avoid marital life and find full satisfaction in pain.

No comments:

Post a Comment