Thursday, 21 May 2015

சினமின்மை - 6

சினமின்மை - 6




கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்

எல்லாருங்காணப் பொறுத்துப்பர்  - ஒல்லை

இடுநீற்றாற் பைஅவிந்த நாகம்போற் றத்தம்

குடிமையான் வாதிக்கப் பட்டு.




கயவர்                  -    கீழ்மக்கள் 
இன்னா சொல்      -    கடுஞ்சொல் 
உய்ப்பர்                 -   விலகிக் கொள்வர் 
ஒல்லை                -    விரைவில் 
இடுநீர்                   -    திருநீர் 
பை                       -     தலை / படம் 
அவிந்த                 -     அடங்கிய 
வாதிக்கம்             -     நிர்பந்தம் 





கல் எரிவது போல், கீழ்மக்கள் வாயிலிருந்து வரும் கடும் சொல், யாவரும் காண பொறுத்துக் கொண்டு, விலகிச் செல்வர் -  (மந்திரிக்கப்பட்ட) திருநீற்றினால்  விரைவில் படம்  அடங்கும் பாம்பு  போல, தத்தம் உயர்குல பெருமையால் நிர்பந்திக்கப் பட்டு.




Just like stones hurled, bitter words proceed out of the base men's mouth. The noble men bear all, in sight of all, and let them pass constrained by their noble worth - like serpent's crest is at once subdued by sprinkling of sacred ash.


No comments:

Post a Comment