தூய்தன்மை - 5
முல்லை முகைமுறுவன் முத்தென் றிவைபிதற்றுங்
கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவனோ?
எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன் .
முல்லை - jasmine
முகை - அரும்பு
முறுவன் - முறுவல் / பல்
கல்லா - படிப்பறிவு இல்லாதோர்
புன்மாக்கள் - இழி மக்கள் / mean people
கவற்ற - கவலைபடுத்த
புறங்காட்டு - சுடுகாட்டு
உதிர் - பிரிந்து
உக்க - விழுதல்
பல்லென்பு - பல் + என்பு (எலும்பு)
ஒழுகுவேன் - ஒழுக்கத்துடன் நடப்பேன்
"அவளது பற்கள் முல்லை அரும்பு போன்றது!" , "அவளது பற்கள் முத்துக்கள் !" - என்று பிதற்றும் படிப்பறிவு இல்லாத கீழ் மக்கள் என்னை திசை திருப்ப விடுவேனோ?
எல்லோரும் காணும்படி சுடுகாட்டில் விழுந்த பற்கள் மற்றும் எலும்புக்களை கண்டவன் ஆதலால், நான் ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்வேன் !
Though uneducated worthless men rave about her teeth as " jasmine buds" or "pearls", shall I allow them to distract me?
As one among many who see in the cremation grounds the fallen teeth & bones strewn around, I will behave myself.

No comments:
Post a Comment