இளமை நிலையாமை - 10
ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலாத்தாற் கொண்டுய்ம்மின்; பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளங் கடைப்பிடித்த னன்று.
உழல் - திரி; அலைதல்
ஆட்பார்த்து உழல் = ஆளைத் தேடி அலைகிறது
அருளில் - இரக்கம் இல்லாத
தோட் கோப்பு - கட்டுச் சோறு
பீள் - கரு
கூற்று - மரணம் / எமன்
உய்ம்மின் - தப்பித்து கொள்
கடைப்பிடி - அறிந்துக் கொள்ளுங்கள்
கள்ளம் - வஞ்சனை
இரக்கம் இல்லாமல் ஆள் பார்த்து அலைகிறது எமன் (மரணம்) என்பது உண்மை என்பதால், (தோளில்) கட்டுச் சோறு எடுத்து காலையிலேயே தப்பித்துக் கொள்ளுங்கள்.
கருவிலிருந்து வந்த சிறு குழந்தையை, தாய் அலறக், கொண்டு செல்லும் மரணத்தின் வஞ்சனையை அறிந்துக்கொள்ளுங்கள்.
It's true that merciless Death is roaming around looking for his man.
Pack your food, & escape early morning.
Death snatches away newly born babies from wailing mothers. Its good to keep in mind Death's guile.

No comments:
Post a Comment