இளமை நிலையாமை - 7
பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
கனிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை; - நனி பெரிதும்
வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் ; மற்றிவளும்
கொற்கண்ணள் ஆகுங் குனிந்து.
பனி - குளிர்ச்சி
நனி - மிகவும்
வெஃகு - விரும்பு
கோற்கண்ணள் - கண் பார்வை குறைந்த
வேற்கண்ணள் = வேல் + கண்ணுடையவள்
பயன்மரம் - பழங்கள் கொண்ட மரம்
பனி பட்ட பூங்காவின் பழம் கொண்ட மரத்திலிருந்து உதிர்ந்து விழும் கனிபோன்றது இளமை. வேல் எய்தும் கவர்ச்சிமிக்க கண்களுடையவள் என்று இவளை விரும்புவோர் அறியவேண்டியது : இவளும் ஒரு நாள் கண் பார்வை குறைந்து, கோல் ஊன்றி கூனிப் போவாள்.
Youth is like the ripe fruit that falls from tree in the dewy grove.
Desire not her whose eyes are as bright as darts. Soon, she too will walk bent down, with a staff in hand to aid her dim sight.

No comments:
Post a Comment