குடிப்பிறப்பு - 1
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் டலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று?
உலறி - தேய்ந்த / இத்துப் போன
கொடிப்புல் - அருகம்புல்
கறி - உண்ணுதல்
இடுக்கண் - இக்கட்டு / துன்பம்
அரிமா - சிங்கம்
பசியால் வாடி துன்புறும் போதும், சிங்கம் அருக்கம் புல்லை உண்ணுமோ ? அதைப்போல, இத்துப் போன ஆடை உடுத்தி, பசியால் உடம்பு வாடி நலிந்த போதும், உயர் குடியில் பிறந்தோர், தங்கள் கொள்கையிலிருந்து விலகுவதில்லை.
Though their clothes may be worn out & their body worn with want, men from noble birth do not leave their principles, even a bit. Even if hunger torment them, do lions eat the creeping grass?

No comments:
Post a Comment